India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெய்து வரும் கோடை மழையால் பருத்தி மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. பருத்தி அறுவடை தீவிரமாக நடைபெற்ற வேளையில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதம் பருத்தி விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது. அரசு உரிய நிவாரண வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். 2021ஆம் ஆண்டு 17 வயதுடைய சிறுமியை தேனிக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நேற்று மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வரும் பாமாயில், துவரம் பருப்பு சில குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த மே மாதம் வழங்கப்படவில்லை. அவர்கள் அந்த பொருட்களை இந்த மாதத்தின் (ஜூன்) முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஜூன் 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் பகுதியில் முகைதீன் பாத்திமா பேபி (64) என்பவருக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான 2,347 சதுரடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயாரித்து, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பத்மநாதன் (49) என்பவர் சிலருக்கு விற்பனை செய்து விட்டார். புகாரின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து பத்மநாதனை நேற்று இரவு கைதுசெய்தனர்.
பாஜக நெல்லை மாவட்ட துணைத் தலைவர் முருகதாஸ் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் மனு நேற்று (ஜூன் 6) அளித்தார். அந்த மனுவில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அவமதிக்கும் நோக்கத்தில் ஆட்டின் கழுத்தில் அவரது பெயரை எழுதி வைத்து அதனை சாலையின் நடுவில் பலியிடுகிறார்கள்; இது கண்டிக்கத்தக்க செயல். இந்தச் செயலில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி 1,66,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2வது முறையாக தொகுதியை தக்கவைத்த நவாஸ் கனி, முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இயூமு லீக் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் தங்கம் தென்னரசு, காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ உள்பட பலர் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மே மாதம் நியாய விலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு பெற இயலாதவா்கள் அந்தப் பொருள்களை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களை பெறுவதற்கு ஏதுவாக கடைகளின் விற்பனை முனையக் கருவியில் தேவையான அனைத்து மாறுதல்களும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் குன்னத்தூர் ராக்கன் திரடு பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி செண்டு. இவருடைய மகள் சரஸ்வதி. இந்த மாணவி ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியிலேயே அரசு பள்ளியில் கல்வி கற்றுள்ளார். இந்த வருடம் (2024) நடைபெற்ற நீட் தேர்வில் 720-க்கு 628 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில், மொத்தம் 1,35,000-க்கும் மேற்பட்டோர் வரி செலுத்துகின்றனர். இதுவரை மாநகராட்சியில் சொத்து, குடிநீர், திடக்கழிவு, குத்தகை இனங்களில் 82% வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, தாமதமான வரி வசூல் பணிகள், ஜூன் 10ஆம் தேதி முதல் மீண்டும் தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டும் 900 ரவுடிகள் குற்ற பட்டியலில் இணைக்கப்பட்டு, அவர்களின் தினசரி நடவடிக்கைகள் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் தேனி எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவில் புதிய முயற்சியாக கூகுள் உதவியுடன், ரவுடிகள் வசிக்கும் வீடு, முகவரி உள்ளிட்ட விபரங்கள் கூகுள் வரைபடத்தில் தயாரிக்கப்பட்டு அவற்றை வைத்து தினசரி ரவுடிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.