India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்ட வேளாண் விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண்மை (இயற்கை வேளாண்மை) குறித்த இரண்டு நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் வரும் ஜனவரி 24, 25 வெள்ளக்கல் கிராமத்தில் நடைபெற உள்ளது. இந்த கட்டணமில்லா பயிற்சியில் வேளாண் விவசாயிகள் பங்கேற்க முன்பதிவிற்கு பாரம்பரிய வேளாண் குழுவை தொடர்புகொண்டு 9597376088 தங்கள் பெயர் பதிவு செய்து கொள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல கலைப்பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை (ஜன.15) கலைவிழா தொடங்குகிறது என தஞ்சை மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் ஜன.15, 16 ஆகிய தேதிகளில் மாலை 5 முதல் இரவு 9 மணிவரை நடைபெறுகிறது.

நாமக்கல் மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030 உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். SHARE பண்ணுங்க…

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு எஸ்.பி ஜெயக்குமார் மேற்பார்வையில், கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், ரகுபதி தலைமையில், 9 துணைக் கண்காணிப்பாளர்கள், 39 ஆய்வாளர்கள், 231 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்.பி. அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவிதொகை வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியுடைய நபர்கள் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி கல்லூரி மாற்று சான்றிதழ், அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஜன.14-ம் தேதி, பகுதி அளவு நிறுத்தப்படுவதாக இருந்த திருச்சி – நாகை – காரைக்கால் டெமு ரயில் மற்றும் காரைக்கால்- நாகை – திருச்சி டெமு ரயில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கம் போல இயங்கும் என தென்னக ரயில்வே பொதுமேலாளர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

சேலம் புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜன.15, 16 ஆகிய தேதிகளில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் “சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நடைபெற உள்ளது. மாலை 5.30 மணி முதல் கரகாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. இந்த விழாவைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

பவானி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (66). இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்ற முன்தினம் வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி கிடந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 120 மில்லியன் ஆண்டு பழங்கால மரம் ஒன்று கல்லாக மாறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 1940ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் இது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைவரும் தெரிந்து கொள்ள இதை ஷேர் பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.