Tamilnadu

News June 17, 2024

அரசியல் பேச தனக்கு உரிமை உள்ளது – மதுரை ஆதினம்

image

மதுரை ஆதீனம் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதினம், ” அரசியல் கருத்துக்களை தான் ஏன் சொல்லக்கூடாது?. தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன், தான் தமிழன், தானும் வாக்களிக்கிறேன், தனக்கு வாக்கு உரிமை உள்ளது. அதனால், தனக்கும் அரசியல் பேச உரிமை உள்ளது ” என்று கூறினார்.

News June 17, 2024

வேலூர்: மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது

image

வேலூர் வாணியர் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவர் மண்டி வீதியில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு அவரிடம் வேலூர் சம்பத் நகரை சேர்ந்த ராமு (33), நான் ரவுடி நீ எனக்கு மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் மாமூல் தர வேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து சதீஷ்குமார் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இன்று ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News June 17, 2024

உங்களை தேடி உங்கள் ஊரில்

image

காட்டாங்கொளத்தூரில் நாளை மறுநாள் (ஜீன்.19) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நடைபெறுகிறது. இதில் ஆட்சியர், அனைத்து துறை அலுவலர்களால், அரசு அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடை, பள்ளிகள்,பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்யப்படும். அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை காட்டாங்கொளத்தூர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது மனுக்களை அளிக்கலாம்.

News June 17, 2024

விருதுநகர் அருகே நாளை மின்தடை

image

விருதுநகர் அருகே அல்லம்பட்டி ஆர்.எஸ்.நகர், பாலவனத்தம், மெட்டுகுண்டு, கடம்பன்குளம், செந்நெல் குடி அரச குடும்பம்பட்டி பொட்டல்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின் வாரியம் சார்பாக வாராந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 17, 2024

இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை

image

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று(ஜீன்.17) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 17, 2024

”மாஞ்சோலையை அரசே எடுத்து நடத்த வேண்டும்”

image

நெல்லையில் இன்று சிபிஎம் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். பேசிய அவர், மாஞ்சோலையை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூடுவது என்பது தீர்வாக இருக்காது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். தற்போது கொடுக்கப்படும் நிதி அவர்களுக்கு போதுமானதாக இருக்காது என்றார்

News June 17, 2024

மயிலாடுதுறையில் நாளை மின் நிறுத்தம்

image

மயிலாடுதுறை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டவுன் – 1 மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை ஜூன் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பட்டமங்கலம் தெருவில் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நீடூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கங்கணம்புத்தூர் பகுதியில் மட்டும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

News June 17, 2024

கடலூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

image

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக ராமநாதபுரத்திற்கு ஜூன் 21, 23, 28, 30 மற்றும் ஜூலை 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கடலூருக்கு 10.55 மணிக்கு வந்து செல்கிறது. மறுமார்க்கமாக மாலை 3 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு கடலூருக்கு இரவு 11.05-க்கு வந்து செல்கிறது.

News June 17, 2024

இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை

image

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று(ஜீன்.17) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 17, 2024

காஞ்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்! 

image

காஞ்சிபுரம், சங்கரமடம் அடுத்த சாலை தெருவில் உள்ள இந்தியன் வங்கி நுழைவாயிலில், காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் டெல்லி ராணி அவரது கணவர் இன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் டெல்லிராணியை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமணையில் அனுமதித்தனர். பணியில் இருந்த பெண் காவலரை பட்டப்பகலில் வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

error: Content is protected !!