India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழுநோய் பாதிப்பு அதிகமுள்ள குத்தாலம் மற்றும் கொள்ளிடம் வட்டாரங்களில் வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம், பெரிய சூரியூர் கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் 850 காளைகளும், 600 காளையர்களும் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்வை திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைக்க உள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சாத்தனூரில் உள்ள ஏரி சுமார் 1000 ஆண்டு பழமையானதாகும். இந்த ஏரி சோழர் காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமான தூம்புக் கல்வெட்டு இன்றளவும் உள்ள. இது 65 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும். சோழர் காலத்தில் அப்பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதரமாக இந்த ஏரி திகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை ஷேர் செய்யவும்….

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஜன.27 முதல் மார்.07 ஆம் தேதி வரை பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, ஹாஸ்டல் வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 0424-2400338 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும். SHAREIT

சிவகிரி அருகே எ.சுப்பிரமணியபுரத்தில் முத்துராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த புதியராஜ் (42) என்பவர், கடந்த 10 நாள்களாக அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வந்தாராம். தகவலின்பேரில், புளியங்குடி போலீஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டு, 240 கிலோ மேற்பட்ட வெடி தயார் செய்யும் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து புதியராஜை கைது செய்தனர்.

ஸ்ரீவியில் நீதிமன்றத்தில் ஏலம் விடப்படும் வாகனங்களை குறைந்த விலைக்கு எடுத்துத் தருவதாகக் கூறி,கட்டட ஒப்பந்ததாரர் ராமசாமியிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக முருகேசகண்ணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணத்தை திரும்ப கேட்டபோது வழங்கப்பட்ட காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பிவிட்டதால், ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாயும் காளைகளை, தீரமுடன் தழுவி அதிக காளைகளை தழுவும் வீரருக்கு முதல் பரிசாக ஒரு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட உள்ளது. களத்தில் நின்று விளையாடி , பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா வரும் ஜன.22-ம் தேதி முதல் பிப்.8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஒன்றியத்திற்கான பரிசுத் தொகையாக முதல் 3 இடங்களுக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 மற்றும் மாவட்டத்திற்கு ரூ.6,000, ரூ.4,000, ரூ.2,000 என வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

வாணரப்பேட்டை சேர்ந்தவர் பிரகாஷ். ஓட்டுநரான இவர், தனது நண்பரான பூமியான்பேட்டையைச் சேர்ந்த தமிழ்மணி, என்பவருடன் உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் ஜன.14 மாலை மது அருந்தியுள்ளார். அப்போது, மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த தமிழ்மணி, பிரகாஷை தகாத வார்த்தையால் திட்டி, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் தமிழ்மணியை தேடி வருகின்றனர்.

புதுகை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் வருகிற 23-ம் தேதி காலை 10:30 மணி அளவில் ஆட்சியர் அருணா தலைமையில், மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கலந்துகொண்டு இடுபொருட்கள் இருப்பு, வேளான் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.