Tamilnadu

News January 19, 2026

ராணிப்பேட்டை பெண்களே! இதை SAVE பண்ணிக்கோங்க!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். Share Now!

News January 19, 2026

பெரம்பலூர் மாவட்ட முதல் ஆட்சியர் யார் தெரியுமா?

image

பெரம்பலூர் மாவட்டம் 1995-ம் ஆண்டு செப்.30-ம் தேதி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதன் பின் 1995 அக்.13-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக க.நந்த கிஷோர் பொறுப்பேற்றார். 1997ம் ஆண்டு மே 12-ம் தேதி வரை மாவட்டத்தின் வளர்ச்சிப் பயணத்தில் தனது பங்களிப்பைச் செலுத்தினார். தற்போது ஆட்சியராக கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

தி.மலை: மின் தடையில் உங்க ஏரியா இருக்கா ?

image

மங்கலம், மன்சுராபாத், அவலூர்பேட்டை, தச்சூர் ஆகிய பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யபட உள்ளது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதை ஷேர் செய்யவும்.

News January 19, 2026

வேலூர்: முதியவரை முட்டி தூக்கிய மாடு!

image

அணைக்கட்டு அருகே கோவிந்த ரெட்டிப்பாளையத்தில் நேற்று (ஜன.18) எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் எதிர்பாராத விதமாக திலகர் என்ற முதியவர் மீது மாடு முட்டியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

News January 19, 2026

மதுரை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
⁍மதுரை: 9445000335
⁍மதுரை வடக்கு: 9445000336
⁍ மத்திய மதுரை: 9445000338
⁍மதுரை மேற்கு: 9445000339
⁍மதுரை கிழக்கு: 9445000340
⁍மேலூர்: 9445000341
⁍வாடிப்பட்டி: 9445000342
⁍உசிலம்பட்டி: 9445000343
⁍திருமங்கலம்: 9445000344
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

News January 19, 2026

நாகை: காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமனம்

image

நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக பி.வி.ஆர்.விவேக் வெங்கட்ராமன் என்பவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நியமனம் செய்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட தலைவருக்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News January 19, 2026

சென்னை: Zepto டெலிவரி பாய்க்கு கத்தி குத்து

image

சென்னை வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்த பார்த்திபன்(23). Zepto டெலிவரி பணியில் உள்ளார். நேற்று மது அருந்திய நிலையில் வேளச்சேரியில் நடந்து வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை கத்தியால் வெட்டி தப்பி ஓடினர். காயமடைந்த பார்த்திபன் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

கிருஷ்ணகிரி: உடல் கருகிய நிலையில் ஆண் சடலம்!

image

சூளகிரி அடுத்த சின்னார் பேடப்பள்ளி கிராமத்தில் இன்று (ஜன.19) காலை வயல்வெளியில் உடல் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

நீலகிரி: 8வது போதும்.. ரூ.62,000 சம்பளம்!

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். SHARE IT!

News January 19, 2026

தஞ்சாவூர்: போலீசார் அதிரடி – ஒருவர் கைது

image

தஞ்சாவூர், சாலியமங்கலம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சோதனை மேற்கொண்டதில், சாலியமங்கலம் மேற்குதெருவை சேர்ந்த சிலம்பரசன்(37) என்பவர், மது விற்பனை செய்வதாக தெரிய வந்தது. இதையெடுத்து அவரிடம் விசாராணை மேற்கொண்டு, 481 மதுபாட்டிகள் பறிமுதல் செய்து, கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் 1622 பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!
↑