Tamilnadu

News July 6, 2025

திருப்பூரில் காளான் வளர்ப்பு பயிற்சி!

image

திருப்பூரில், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, காளான் வளர்த்தல் மற்றும் அதன் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி விரைவில் நடைபெறவுள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு, அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 9489043926, 9952518441 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News July 6, 2025

கோவை: பெட்டதம்மன் மலைக்கோயில்!

image

கோவை காரமடை அருகே உள்ள, பெட்டதாபுரத்தில் புகழ்பெற்ற பெட்டதம்மன் மலைக்கோயில் உள்ளது. இந்த கோயிலை காண 2 கி.மீ அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்க வேண்டும். சக்திவாய்ந்த பெட்டதம்மனை தரிசித்தால், வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். கவலையை மறந்து குடும்பத்துடன் ஒருநாள் கோயிலில் செலவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு, இயற்கை எழில் கொஞ்சும் பெட்டதம்மன் கோயில் ஒரு வரப்பிரசாதம். இதை SHARE பண்ணுங்க.

News July 6, 2025

ரூ.4 கூடுதல் கட்டணம் கேட்ட நடத்துநருக்கு ரூ.12,000 அபராதம்

image

நாங்குநேரியைச் சேர்ந்த கண்ணன், பார்வதிநாதன் ஆகியோர் நெல்லையிலிருந்து நாங்குநேரி சென்ற பஸ்ஸில் ஏறிய போது பைபாஸ் வழியாக செல்லும் என நடத்துனர் கூறினர். பின்னர் இருவரையும் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டார். மேலும் டிக்கெட் கட்டணத்தில் ரூ.4 கூடுதலாக பெற்றார். இது குறித்து இருவரும் அளித்த புகாரின் படி நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து நடத்துனர் ரூ.12 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.

News July 6, 2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தையல் பயிற்சி

image

தென்காசி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு 8778859095 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மகளிர் உரிமை துறை சார்பில் கேட்டுக் கொள்ளபட்டது.

News July 6, 2025

கிருஷ்ணகிரி பெண்களுக்கான இலவச அழகு கலை பயிற்சி

image

இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பெண்களுக்கான இலவச அழகு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண்கள் மட்டுமே அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி 8ம் வகுப்பு முதல் 18 வயது முதல் 45 இருக்க வேண்டும். பயிற்சியின் இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை 8க்குள் விண்ணப்பிக்கலாம். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

நெல்லையில் வாகனங்கள் உரிமை கோராவிட்டால் ஏலம்

image

நெல்லையில் ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமையாளர்கள் ஆவணங்கள், ஆதார் அட்டையுடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆஜராகி, அபராதம் செலுத்தி வாகனங்களை மீட்கலாம். உரிமை கோரப்படாவிட்டால், வாகனங்கள் ஏலம் விடப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News July 6, 2025

ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகளில் தங்கும் அறைகள்

image

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத ஐந்து ரயில் பெட்டிகள் பயன்படுத்த உள்ளனர். இதனை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படியில் விடப்பட உள்ளது. www.ireps.gov.in இணையதளம் வாயிலாக ஜூலை 15-ம் தேதிக்கான விண்ணப்பிக்க என ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

News July 6, 2025

தேனியில் இலவச Tally பயிற்சிக்கு வரவேற்பு

image

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜூலை 18 முதல் கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் (டேலி) பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம் என மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

விழுப்புரம்: “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்த கையேடு!

image

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் (ம) தகவல் கையேடு வழங்கும் பணி 07.07.2025 முதல்
தொடங்கவுள்ளது. தொடர்ந்து 15.07.2025 முதல் முகாம்கள் நடைபெறவுள்ளது.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு மக்கள் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். மேலும் விடுபட்ட மகளிருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களில் நாளை முதல் வீடு வீடாகச் சென்று தன்னார்வலர்கள் மகளிர் உரிமை தொகை காண விண்ணப்பங்களை விநியோகிக்க உள்ளனர். இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!