India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
30 ஏப்ரல் 2025 அன்று, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், வலுவான கடவுச்சொல் பயன்படுத்துவது உங்கள் தரவுக்கான ‘டிஜிட்டல் சீட் பெல்ட்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. “உங்கள் தரவு, உங்கள் பொறுப்பு” என்ற குறிப்புடன், இணைய பாதுகாப்பில் கடவுச்சொல் முக்கியத்துவத்தை விளக்கும் இந்த விழிப்புணர்வு மக்களுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.
கோவை மாநகரில் நடப்பாண்டில் 78 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். பல்வேறு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் குற்றங்கள் தடுப்பதற்காக காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு 51 பேர் மீது இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த ஆண்டு இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை(நீட்ஸ்) செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ., படித்தோர், இளங்கலை பட்டம் பெற்ற, 21 முதல் 55 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் மகளிர், சிறுபான்மையினர் முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க இந்த <
மே தினம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இன்று (ஏப்.30) முதல் மே 05- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, ஓசூர், பெங்களூரு, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்தும் மேற்கண்ட நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி பதிவில், கரூர், ஜோதிவடம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோர், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.மழலைகளை இழந்து வாடும் பிரபு ,மதுமதி, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.
மதுரை சிறுமி உயிரிழந்த வழக்கில் 8க்கும் மேற்பட்டோரிடம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அலட்சியமாக செயல்பட்டதாக பள்ளி தாளாளர் திவ்யா ராஜேஷ் மற்றும் உதவியாளர் வைரமணி ஆகிய இருவர் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறைச் சாலையில் இருவரையும் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வரும் மே.4ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நீட் தேர்வை 6 மையங்களில் 3012 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 812 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 629 மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம், சமூக வலைதளத்தில் இன்று ஸ்கேம் அலர்ட் வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கு உடனடி நிதி உதவி தேவை என பொய்யான மோசடி செய்தி பரவுவதாக எச்சரித்துள்ளது. பொதுமக்கள் இத்தகைய மோசடி செய்திகளை நம்ப வேண்டாம், பகிர வேண்டாம் எனவும், சந்தேகத்திற்குரிய செய்திகளை உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு திருப்பூரை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய இந்த லிங்கை <
தூத்துக்குடி, அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளையும் புகார்களையும் இந்த வாட்ஸ் ஆப் எண் 80980 24555 மூலமாகவோ அல்லது தொலைபேசி எண்(80980 24555) மூலமாகவோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் <
Sorry, no posts matched your criteria.