Tamilnadu

News April 25, 2025

26ஆம் தேதி வெறி நோய் தடுப்பூசி முகாம்

image

நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் ராமையன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரியில் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் அடையலாம் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

News April 25, 2025

திருவள்ளூரில் நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகள் வேகம்

image

ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் மார்க்கத்தில், 2.6 கி.மீ.,க்கு சாலை அகலப்படுத்தும் பணி, 19.50 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. சித்துார் – திருத்தணி மாநில நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி படிப்படியாக நடந்து வருகிறது. காரனோடை பஜாரில் இருந்து சோழவரம் செங்காளம்மன் கோவில் அருகில், தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 5 கி.மீ., தூரத்திற்கு, 15 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்படுகிறது.

News April 25, 2025

கல்லூரி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் நாவுபாடா(19) என்பவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவரின் உடல் விருதுநகர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

News April 25, 2025

நாகையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்.

image

நேற்று முன்தினம் நாகை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளாங்கண்ணி செல்லும் ECR சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சொகுசு கார் ஒன்றில் சோதனை செய்தபோது, காரில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதில் கவிவர் மன்(வயது 26), விக் னேஷ்(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

News April 25, 2025

ரூ.265 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

image

திருச்சி சுங்கத்துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.265 கோடியே 44 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், அரியலூர் பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் தீயில் இட்டு அழிக்கப்பட்டது. இதில் 16 கிலோ கஞ்சா, 4 கிலோ போதை எண்ணெய், 23 கிலோ போதைப்பொருள், 39 கிலோ மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள், ரூ.7 லட்சம் மதிப்பிலான 1,40,500 வெளிநாட்டு சிகரெட்டுகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டது.

News April 25, 2025

திருச்சி-பாலக்காடு ரெயில் சேவைகளில் மாற்றம் கரூர் வரை இயங்கும்

image

சேலம் கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண்: 16844 பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 26, 29 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.

News April 25, 2025

ராணிப்பேட்டையில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு சாலை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (ஏப்ரல் 25) காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு +2, பட்டப்படிப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், மற்றும் பி.இ படித்தவர்கள் பங்கேற்கலாம்.

News April 25, 2025

சிகிச்சைக்குப் பயந்து இளைஞர் தற்கொலை

image

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விபாஸ் பன்வான்(30). திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில் நிலையத்தில், ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைக்கு பயந்த அவர், மருத்துவமனை 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

News April 25, 2025

திருவள்ளூர் பிரதோஷ வழிபாடு நடைபெறும் கோவில்கள்

image

இன்று பிரதோஷ வழிபாடுகள் நடைபெறும் கோவில். திருவள்ளூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், பூங்கா நகர் சிவ-விஷ்ணு கோவில், தேரடி தீர்த்தீஸ்வரர் கோவில், பெரியகுப்பம் ஆதிசோமஸ்வரர் கோவில்,பூண்டி அக்னீஸ்வரர் கோவில், தொட்டிக்கலை சிதம்பரேஸ்வரர் கோவில், பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தாராட்சி பரதீஸ்வரர் கோவில், தேவந்தவாக்கம் தேவநாதீஸ்வரர் கோவில். நேரம் மாலை 4.30. இதில் பங்கேற்றால் பல நன்மைகள் கிட்டும். நண்பருக்கு பகிரவும்

News April 25, 2025

6 மாதத்திற்கு உள்ளே வரக்கூடாது: கமிஷனர்

image

கோவையில் குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், அடிதடி, வழிப்பறி, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்து வரும் ரவுடிகளை கண்டறிந்து 6 மாதங்களுக்கு மாநகரை விட்டு வெளியேற்ற மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தற்போது 29 ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் 6 மாதங்களுக்கு, கோவை மாநகர பகுதிக்குள் வர தடை விதித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!