India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. (DISHA), மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர்/விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில், ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்,முன்னிலையில் இன்று (பிப்.19) நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலராக சேர விரும்புவோர் குறிப்பிட்ட தகுதிகளுடன் விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்கள் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பங்கேற்க உள்ளனர். விண்ணப்பங்கள் பெறும் தேதி மற்றும் விவரங்களுக்கு காவல்துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். விவசாயிகள் எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்றும், முறைகேடுகள் குறித்து உடனடியாக புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதிகாரிகளுக்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான நான்காவது காலாண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்திற்கான 2026 -2027 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் முன்னிலையில் இன்று (பிப்.19) வெளியீட்டார்.

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (பிப்ரவரி 19) சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சேண்பாக்கம் அரசினர் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், தனித்துணை ஆட்சியர் திருமாறன், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் மூன்று முறை தமிழகம் வர உள்ளார். முதலில் மார்ச் 1-ம் தேதி மதுரையிலும், பின்னர் மார்ச் 7-ம் தேதி வேலூரிலும், இறுதியாக மார்ச் 11-ம் தேதி திருச்சி மற்றும் தஞ்சாவூரிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். வேலூர் வருகைக்கான தேதி மட்டும் மார்ச் 6-ம் தேதியிலிருந்து மார்ச் 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப் 19) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள உட்கோட்டங்களில், இன்று (பிப்.19) இரவு பணி அதிகாரிகள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் திருநெல்வேலி உட்கோட்டத்தில் காளீஸ்வரி, நாங்குநேரியில் நவீஸ் அந்தோணி ரோஸி, வளளியூரில் சாந்தி, சேரன்மகாதேவியில் சுந்தரமூர்த்தி, அம்பாசமுத்திரத்தில் ஆதம் அலி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபடுவர் என, நெல்லை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.