India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்: மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள பத்மகிரீஸ்வரர் கோயில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் பத்மகிரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். இந்தக் கோயிலில் வந்து வழிபட்டால் ராகு, கேது தோஷம் நீங்கி, திருமணத் தடை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
பங்குனிமாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி ரொம்ப ஸ்பெசல் தான். இன்றைய தினம் சிவனுக்கு பால் அபிஷேகம் (or) பூக்களால் அர்ச்சனை செய்தால் பல தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். செல்ல வேண்டிய சிவன் கோவில்கள் திருத்தணி வீரட்டேசுவரர் கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், பூண்டி ஊன்றீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில். *நண்பர்களுக்கும் பகிரவும்
ஈரோடு, சென்னிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1749 அடி உயர மலையின் மீது கம்பீரமாக அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கைகூடும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
தற்கால சூழலில் உடல் நோய்களை விட மன நோய்களே மக்களிடையே அதிகம் உள்ளது. அப்படிப்பட்ட எவ்வித மனநோயையும் தீர்த்து வைக்கும் ஓர் ஆலயம் தான் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி ஆலயம் . இந்தக் கோயில் தீர்த்தத்தில் தினமும் குளித்து ஆறுமுகனின் ஆறாவது அதோ முகத்தை கண்டால் மனநோய் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைவிற்கு நாள் கூட்டம் ஏப்.17 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்கள், டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான (Diploma in Aari Embroidery and Hand Printing On Textiles) பெறுவதற்கு, தாட்கோ இணையதளத்தின் www.tahdco.com வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (ஏப்.12) தெரிவித்துள்ளார்.
பங்குனி மாத கடைசியான இன்று தோன்றும் பௌர்ணமி சைத்ர பூர்ணிமா எனப்படுகிறது. இன்றைய தினம் சித்ரகுப்தரை வணங்குவது வழக்கம். மேலும், இன்று அரசி, பால், தயிர், சங்கு, தண்ணீர், வெள்ளை ஆடை ஆகியவற்றை தானம் செய்தால் பல தோசங்கள் நீங்கி அதிஷ்டம் பெருகும் என்பது ஐதீகம். காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் உள்ள சித்ரகுப்தர் கோவிலுக்கு சென்றால் பல நன்மைகள் கிடைக்கும். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*
தமிழகத்தைப் பொறுத்தவரை ‘ஸ்டீல் பிளான்ட்’ என்றாலே சேலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் பரங்கிப்பேட்டையில் தான் முதல் இரும்பு உருக்காலை தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் 1818இல் கிழக்கிந்திய கம்பெனியில் சிவில் ஊழியராக பணியாற்றிய ஜே.எம்.ஹீத் என்பவர், நான் அந்த உருக்காலையை தொடங்கினார். சிறப்பாக இயங்கி வந்த பரங்கிப்பேட்டை உருக்காலை 1867இல் மூடப்பட்டது. SHARE NOW!
மன்னார்குடியை சேர்ந்தவர் ராமன். இவர் நேற்று இரவு தனது டூவீலரில் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் ராமர் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் இன்று காலை ருக்மணி பாளையம் சாலையில் ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணையில் அது ராமர் என உறுதிப்படுத்தினர். இதையடுத்து விபத்தா? கொலையா? எனும் கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணியில் கிடைக்கப்பெறும் மண், சக்கை கல் உள்ளிட்ட கனிமங்களை அப்புறப்படுத்துவதற்கு வரும் 28-ந் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சீட்டுகள் மூலம் கனிமங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது என சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.