Tamilnadu

News March 25, 2026

குமரி மக்களே.. இந்த நம்பரை மறக்காம SAVE பண்ணிக்கோங்க!

image

குமரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

குமரி மக்களே.. இந்த நம்பரை மறக்காம SAVE பண்ணிக்கோங்க!

image

குமரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

பெரம்பலூர்: குடிநீர் பிரச்சனையா?-ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். குடிநீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்த புகார்களை <>PUNAL Citizen Mobile App<<>> மூலமாகவும், 1916 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும், WhatsApp No – 9499991916 எண்ணில் புலனம் மூலம் தெரிவிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

News March 25, 2026

திருச்சி – பாலக்காடு ரயில் வழித்தடம் மாற்றம்

image

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இரயில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வழக்கமான வழித்தடமான பீளமேடு, சிங்கநல்லூர், கோவை ஆகிய சந்திப்புகளை தவிர்த்து, போத்தனூர், இருகூர் வழியாக இயக்கப்படும். மேலும் போத்தனூரில் கூடுதலாக 3 நிமிடங்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

BREAKING: வேப்பனஹள்ளி தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில், வேப்பனஹள்ளி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள இவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

News March 25, 2026

BREAKING: நன்னிலம் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அதிமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சரும் MLA-வுமான ஆர்.காமராஜ் போடியிட உள்ளார். தொடர்ந்து 3வது முறையாக நன்னிலம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2026

JUST IN: மதுரவாயல் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

திருவள்ளூர்: வருகின்ற சட்டமன்ற தேர்தல் – 2026-யில் அதிமுக சார்பாக மதுரவாயல் தொகுதியில் முன்னாள் அமைச்சர், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின் போட்டியிடவுள்ளதாக, அக்கட்சி சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 89,577 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2026

BREAKING: பாலக்கோடு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அன்பழகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 25, 2026

BREAKING: பவானி தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில், பவானி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் மீண்டும் போட்டியிடுகிறார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள இவர், பவானி தொகுதியில் ஏற்கனவே 3 முறை வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2026

BREAKING: அரியலூர் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அவ்வகையில் அரியலூர் மாவட்டம் அரியலூர் தொகுதியில் அரசு முன்னாள் தலைமைக் கொறடாவும், அதிமுக மாவட்ட செயலாளருமான தாமரை S. ராஜேந்திரன் போட்டியிட உள்ளார்.

error: Content is protected !!
↑