Tamilnadu

News March 27, 2026

புதுச்சேரி: முதியவர் தூக்கிட்டு தற்கொலை

image

திருநள்ளாறு சுரக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (95). இவரது மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். மகன்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் உடல்நல பிரச்சினையால் சுப்ரமணியன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட சுப்ரமணியன், மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருநள்ளாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2026

நாகை: சாலையில் கிடந்த ஆண் சடலம்

image

நாகூர் அருகே உள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடி சாலை அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஒரத்துர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை!

image

மேல்மலையனூர் அருகே சீயப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி பார்வதி(45). சம்பவத்தன்று இவர் திடீரென விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

பூந்தமல்லி அருகே துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சீலா(41). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று(மார்ச் 26) காலை தனது தோழி மகாலட்சுமியுடன் மொபட்டில் தேர்வு மையத்திற்கு சென்றார். அப்போது, நசரத்பேட்டை அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். படுகாயமடைந்த சீலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் ராம்(52)-ஐ போலீசார் கைது செய்தனர்.

News March 27, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் எச்சரிக்கை!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் காலங்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதியோர்கள், சிறார்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால், மதியம் 12:00 மணியில் இருந்து 3:00 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீர் குடிப்பதோடு, டீ, காபி, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டுமென கலெக்டர் சந்திரகலா அறிவுறுத்தியுள்ளார்.

செங்கை: லிப்ட்டில் செல்வோர் கவனம்; உயிரே போய்டும்!

image

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாபர் எஸ்கே (29). இவர், தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தார். கட்டிடத்தின் 2-வது மாடியில் பில்லர் அமைப்பதற்காக, ‘லிப்ட்டில்’ இரும்பு சீட்டுகளை ஏற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக ‘லிப்ட’ எந்திர வடத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ஜாபர் எஸ்கே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 27, 2026

காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

image

நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணியரசு(25). இவர், காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரே உள்ள துணிக்கடை அருகே தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பிய போது பைக் காணவில்லை. இதுகுறித்து சிவ காஞ்சி போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்கு பதியப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்த போலீசார் காமாட்சி அம்மன் சன்னதி தெருவைச் சேர்ந்த கணேசன்(41) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!
↑