India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தை துவங்கியுள்ள சசிகலாவை நடிகர் கார்த்திக் நேரில் சந்தித்து அவரது தலைமையிலான அணிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நடிகர் கார்த்திக் சிவகாசி தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் இன்று 103.6 °F வெப்பம் பதிவானது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. இதற்கு முன்னர் கடந்த 6ஆம் தேதி 104°F வெப்பம் பதிவானது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இன்று 103.6F பதிவாகியுள்ளது. இதனால் டூவீலரில் செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சாலையில் நடந்து சென்ற பெண்கள் குடைபிடித்தபடியும் துப்பட்டாவை தலையில் மூடிக்கொண்டு செல்வதை காண முடிந்தது.

திருப்பத்தூர் தொகுதி அ.ம.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதால், சீட் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அ.தி.மு.க திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளரான டாக்டர் என்.திருப்பதி, இரு நாள்களுக்கு முன்பு த.வெ.கவில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அவரை திருப்பத்தூர் தொகுதி வேட்பாளராக த.வெ.க தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன? கட்சி தாவிய திருப்பதி வெற்றி பெறுவாரா? கம்மெட்ல சொல்லுங்க.

கறம்பக்குடி தாலுகா காட்டாத்தி, கழியான் விடுதி, பட்டிவிடுதி, ஊரணிபுரம், பகுதி பொதுமக்கள் அரசு சம்பந்தப்பட்ட பணிகளுக்கு புதுகை நிர்வாகத்திற்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் MLA க்கு வாக்களிக்க வேண்டும் என்றால் ஒரத்தநாடு, பேராவூரணி, கந்தர்வகோட்டை, பகுதிகளுக்கு வாக்களிக்கின்றனர். இதனால் எம்எல்ஏக்களை சந்திக்க சிரமப்படுகின்றனர். ஆகவே ஆலங்குடி & கந்தர்வ கோட்டையில் இணைக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் திருலோக சுந்தர் கடந்த 25 ஆம் தேதி பெருமாள் பட்டி பகுதியில் ஒஇரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது சிறுவர்களை வைத்து பிரச்சாரம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் சிறார் நீதி சட்டம், குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு சட்டம், பிரிவுகளில் எழிலரசு உள்ளிட்ட ஒரு மீது திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதிக்கான வேட்பாளராக E.தென்றல் குமார் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.வி.குப்பத்தைச் சேர்ந்த தவெக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்றல் குமார் தவெக-வில் இணைந்து 3 மாதங்களே ஆனதாக கூறி போராட்டம் செய்து வருகின்றனர்.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்புகள் மற்றும் இறைச்சி கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் கடைகளை மூட வேண்டும்
விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பவானி சாகர்- சுந்தரம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் திருப்பூர் வடக்கு-ரவி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.