Tamilnadu

News April 4, 2026

மாயவரம்: MLA தலைமையில் ஐக்கியம்!

image

பூம்புகார் தொகுதி செம்பனார்கோவிலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திமுக மாவட்ட செயலாளர் MLA நிவேதா எம் முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி மூத்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேலபெரும்பள்ளம் வைகல் கோனேரிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி, MLA தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

News April 4, 2026

ராம்நாடு: டீ கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து.!

image

முதுகுளத்தூர் அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் பஸ் நிலையம் அருகே ஆனந்தன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவில் திடீெரன கடை தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் கடையில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 4, 2026

திருப்பூர்: குடும்ப தகராறில் பெண் தற்கொலை

image

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன். அவரது மனைவி வசந்தி‌ இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கனவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வசந்தி கடந்த 2 மாதமாக திருப்பூர் காந்திநகர் லட்சுமி தியேட்டர் சாலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை.

News April 4, 2026

கள்ளக்குறிச்சி தவெகவில் இருந்து கொத்தாக விலகல்!

image

கள்ளக்குறிச்சி: திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று(ஏப்.3) தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தொட்டியம் ஊராட்சி கழகத்திலிருந்து சுமார் 40 பேர் தவெகவில் இருந்து விலகி தங்களை சின்னசேலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர், சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் அன்புமணிமாறன் ஏற்பாட்டில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

News April 4, 2026

சின்னசேலம் அருகே பைக் விபத்தில் விவசாயி பலி

image

சின்னசேலம் அருகே கருந்தலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமலை (63 ). விவசாயியான இவர் நேற்று(ஏப்.3) தனது பைக்கில் நயினார் பாளையம் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது காப்புக்காடு பகுதியில் பைக்கில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில், பின் தலையில் பலத்த அடிபட்டு, சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 4, 2026

மாயவரம்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், கோடை விடுமுறையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆறு, குளம், குட்டை, ஏரி, கிணறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளிப்பதாக்லும் விளயாடுவதாலும் சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் மிகுந்த கவனமுடன் தங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

News April 4, 2026

கிருஷ்ணகிரி: எம்எல்ஏ உட்பட 2,500 பேர் மீது வழக்கு!

image

தளி தொகுதியில் சிபிஐ வேட்பாளர் டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சுமார் 2,500 பேர் முன் அனுமதியின்றி ஊர்வலமாக வந்து இடையூறு ஏற்படுத்தியதாக பறக்கும் படை அதிகாரி பிரசாந்த் குமார் அளித்த புகாரின் பேரில், ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் 2,500 பேர் மீது தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு.

News April 4, 2026

கிருஷ்ணகிரி: எம்எல்ஏ உட்பட 2,500 பேர் மீது வழக்கு!

image

தளி தொகுதியில் சிபிஐ வேட்பாளர் டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சுமார் 2,500 பேர் முன் அனுமதியின்றி ஊர்வலமாக வந்து இடையூறு ஏற்படுத்தியதாக பறக்கும் படை அதிகாரி பிரசாந்த் குமார் அளித்த புகாரின் பேரில், ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் 2,500 பேர் மீது தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு.

News April 4, 2026

திருச்செங்கோடு: பச்சிளம் குழந்தை பரிதாப உயிரிழப்பு!

image

திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). இவர் நேற்று டூவீலரில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு, திரும்பி கொண்டிருந்தார். கொக்கராயன் பேட்டை சாலையில் வந்த போது, ரோகித் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்தவர்கள் தி.கோடு GH-க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அஜித்குமாரின் 4 மாத குழந்தை ஹாசிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தனர்

News April 4, 2026

நீலகிரி: மதுக்கடைகள் மூடல் – கலெக்டர் அதிரடி உத்தரவு!

image

நீலகிரி மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட அறிவிப்பில், தேர்தலை முன்னிட்டு 21-ந்தேதி காலை 10 மணி – 23-ந்தேதி இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ந்தேதி மதுவிலக்கு அமலில் இருக்கும். இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்புகள் உள்ளிட்ட அனைத்து மதுபான விற்பனை இடங்களும் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை.

error: Content is protected !!
↑