India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் விற்பனை குழு ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று LED திரை மூலம் பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இதேபோல மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரத்தினசாமியின் உத்தரவின் பேரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தென்காசி மாவட்டம், திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (25). இவர் தளவாய்புரம் பகுதியில் சிலருடன் சேர்ந்து மைக் செட்டுகளை அவிழ்த்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரபாகரன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டுஅரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (39) என்பவர் எலக்ட்ரீசியனாக உள்ளார். இந்நிலையில் அவர் குரும்பூர் அங்கமங்கலம் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று (ஏப்.10) பரப்பரைக்காக தஞ்சைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதனை அடுத்து இன்று (ஏப்.10) காலை 6 மணி முதல் நாளை (ஏப்.11) காலை 6 மணி வரை தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும் மேலும் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்ற மதுபான விற்பனை கூடங்கள், தேர்தலையொட்டி வரும் 21ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான 23ஆம் தேதி மூடப்படுகிறது. அதேபோல் தேர்தல் முடிவு வெளியாகும் மே 4ஆம் தேதியும் மூடப்படும். மேற்கண்ட நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

சேலம் அன்னதானப்பட்டியில் 2015-இல் மனோஜ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாட்ஷா உள்ளிட்ட 9 பேர் மீது சேலம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் வெளியானதைத் தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சட்டசபைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் நேற்று (09.04.2026) மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, 9 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 171 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக திருவெறும்பூர் தொகுதியில் 26 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக முசிறி தொகுதியில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.