Tamilnadu

News April 10, 2026

சேலம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

image

சேலத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் பெறப்பட்ட 355 வேட்புமனுக்களில், பரிசீலனை மற்றும் வாபஸ் பெற்ற பின் 193 பேர் இறுதி வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். சேலம் வடக்கு (14), சேலம் தெற்கு (19), சேலம் மேற்கு (31), ஓமலூர் (15),மேட்டூர் (18),கெங்கவல்லி (13), சங்ககிரி (20),எடப்பாடி (15), வீரபாண்டி (20),ஏற்காடு (தனி)-(13) மற்றும் ஆத்தூர் (தனி)-(15) என மொத்தம் 193 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விழுப்புரத்தில் பரிதாப பலி!

image

கரூர் மாவட்டம் வடலம்பாடியைச் சேர்ந்தவர் ஜெயராம்(47). தச்சுத் தொழிலாளியான இவர், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2 வாரங்களாக தச்சு வேலை செய்து வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தவர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புழல் சிறையில் கைது சாவு!

image

சென்னை யானைக்கவுனியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(26). இவர், கொலை மிரட்டல் வழக்கில் கடந்த 5ஆம் தேதி போலீசாரால கைது செய்யப்பட்டு, புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று(ஏப்.9) திடீரென உடல்நலக் குறைவு காரணமாக வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News April 10, 2026

சின்னசேலம் அருகே துடித்துடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த பி.ஏ.அம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி(64). விவசாயியான இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலத்தில் மஞ்சள் பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நிலத்தில் இருந்த காய்ந்த சருகுகளை அப்புறப்படுத்தி அதனை தீ வைத்து கொளுத்தும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், படுகாயமடைந்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

News April 10, 2026

கிருஷ்ணகிரி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் மொத்தம் 182 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில், 99 ஏற்கப்பட்டு 12 நிராகரிக்கப்பட்டன. மேலும் 20 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். 6 தொகுதிகளில் இறுதியாக 79 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஊத்தங்கரை – 5, பர்கூர் – 10, கிருஷ்ணகிரி – 6, வேப்பனஹள்ளி – 6, ஒசூர் – 7 மற்றும் தளி – 4 என மொத்தம் 38 சுயேட் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

News April 10, 2026

நாமக்கலில் கோடைகால நீச்சல் பயிற்சி தொடக்கம்

image

நாமக்கல்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நாமக்கல் மாவட்ட மைதான நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி ஏப்.1 முதல் ஜூன் 14 வரை நடைபெறுகிறது. அனைவரும் விண்ணப்பிக்கலாம். 12 நாள் பயிற்சிக்கான கட்டணம் ₹1,200 + 18% ஜிஎஸ்டி சேர்த்து ₹1,416 ஆகும். கட்டணம் ஆன்லைனில் மட்டும் செலுத்த வேண்டும். பயிற்சி 5 கட்டங்களாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News April 10, 2026

திருப்பூர்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 134 வேட்பு மனு தாக்கல் தேர்தல் அலுவலரால் ஏற்கொள்ளப்பட்டது. அதில், 18 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலில் 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் – 9
காங்கேயம் – 15
அவிநாசி – 14
திருப்பூர் (வடக்கு) – 15
திருப்பூர் (தெற்கு) – 24
பல்லடம் – 15
உடுமலை – 11
மடத்துக்குளம் – 13
மொத்தம் – 116

News April 10, 2026

நெல்லை: அரசு பஸ் மோதி பெண் உயிரிழப்பு

image

நெல்லை டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த அமுதா நேற்று இரவு மொபட்டில் தனது மகளுடன் டக்கரம்மாள் அருகே பெட்ரோல் பங்க் முன்பு சாலையை கடக்க முயன்ற போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பார விதமாக அமுதா ஓட்டிசென்ற மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் பாளை GH-ல் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அமுதா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!
↑