Namakkal

News January 17, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (17/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சிவா (9003448017), திருச்செங்கோடு – மலர்விழி (9498109579), வேலூர் – இந்திராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News January 17, 2025

வெப்படையில் சாலை மறியல் போராட்டம்

image

பள்ளிபாளையம் நகராட்சியுடன் எலந்தகுட்டை ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று பள்ளிபாளையம் சங்ககிரி பிரதான சாலை வெப்படை நான்கு ரோடு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News January 17, 2025

மலரஞ்சலி செலுத்திய அமைச்சர், எம்பி ராஜேஷ்குமார்

image

திமுக நாமக்கல் கிழக்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் சிலம்பரசனின் தந்தை ஆறுமுகம் மறைவையொட்டி எம்பி ராஜேஷ்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் அவருடைய இல்லத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்வின்போது துணை மேயர் பூபதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News January 17, 2025

ஆளுநருக்கு காவி உடை அனுப்பி வைப்பு

image

வெள்ளை உடையணிந்து இருந்த வள்ளுவரை, ஆளுநர் ஆர்.என். ரவி காவி உடையை மாற்றியதை  கண்டித்து, நாமக்கல்லில், ஆளுநருக்கு காவி உடையை, அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர் காந்தியவாதி ரமேஷ், அனுப்பினார். நாமக்கல் தலைமை அஞ்சலகம் மூலம், தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இனி தமிழக ஆளுநர் ஆர் அன் ரவி காவி உடை அணிய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

News January 17, 2025

700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பெயர் பதிவு

image

பொங்கல் பண்டிகையொட்டி நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. நாமக்கல் ஆட்சியர் உமா, பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், மாதேஸ்வரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்க உள்ளனர். இதில் 700 காளைகள் 400 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

News January 17, 2025

நாமக்கல் மக்களே இன்றே கடைசி நாள்: APPLY பண்ணுங்க!

image

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை பாதுகாத்திட முயற்சிகள் மேற்கொண்டு வரும் செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் நீர்நிலை பாதுகாவலர்கள் விருது விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. இதில் ஒரு லட்சம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இன்று கடைசி நாள் (17/1/2025). <>https://awards.tn.gov.in<<>> வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2025

இன்றைய முட்டை விலை ரூ.4.60 காசுகளாக நிர்ணயம்

image

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.80 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைத்து ரூ.4.60ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று மாலை அறிவித்துள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. விற்பனை மற்றும் நுகர்வு குறைந்துள்ளதாலும், பிற மண்டலங்களிலும் முட்டை விலை குறைந்து வருவதுமே விலை குறைப்புக்கு காரணம் என கூறினர்.

News January 17, 2025

சிறப்பு அலங்காரத்தில்  காட்சி தந்த ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், தை மாத வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு,சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மகா தீபம் காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 10:30 மணி அளவில் பலவித வாசனை திரவியம் கொண்ட அபிஷேகமும், பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபம் காண்பிக்கப்பட்டது.

News January 17, 2025

நாமக்கல்: இளவட்டக்கல் தூக்கி அசத்திய பெண்கள்

image

பொங்கல் விழாவின் ஒருபகுதியாக நேற்று காணும் பொங்கல் கொண்டாடடப்பட்டது. இதையொ ட்டிநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி ஆண்களுக்கு இணையாக பெண்களும் போட்டி போட்டு இளவட்ட கல்லை தூக்கினார்கள். 47 கிலோ கல்லை பெண்கள் பலா் சா்வ சாதாரணமாக தூக்கியது பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது.

News January 16, 2025

பெண் எரித்துக்கொலை: தந்தை, மகன் கைது

image

நாமக்கல்லில் கூலி தொழிலாளி பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் தந்தை, மகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பூங்கா நகரில் தொழிலாளி பூமாரி என்பவரை கொன்ற மேஸ்திரி மாரியப்பன் மற்றும் அவரது மகன் சேட்டு என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலி கேட்டு தகராறு செய்ததால் பூமாரியை கொன்றதற்காக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!