Namakkal

News January 18, 2025

நாமக்கல்லில் இன்று முட்டை விலை உயர்வு

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் 20 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இதன் காரணமாக முட்டையின் பண்ணை கொள்முதல் விலை நேற்று ரூ 4.60 காசுகளாக இருந்தது. இன்று 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ 4.80 ஆக உள்ளது.

News January 18, 2025

நாமக்கல்: 3 நாளில் ரூ.19 கோடிக்கு மது விற்பனை

image

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாளில் ரூ.19 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளிலும் பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கத்தைவிட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக கடந்த 13, 14ஆம் தேதிகளிலும், நேற்று முன்தினமும் மது விற்பனை அதிகரித்திருந்தது. அதன்படி 3 நாட்களில் ரூ.19 கோடிக்கு மது விற்பனையானது தெரியவந்துள்ளது.

News January 18, 2025

நாமக்கல்லில் இன்று முட்டை விலை உயர்வு

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் 20 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இதன் காரணமாக முட்டையின் பண்ணை கொள்முதல் விலை நேற்று ரூ 4.60 காசுகளாக இருந்தது. இன்று 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ 4.80 ஆக உள்ளது.

News January 18, 2025

நாமக்கல்: வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டு நிகழ்ச்சி

image

ராசிபுரம் தாலுகா முள்ளுக்குறிச்சியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பழங்குடியின நலத்துறை சார்பில் வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 10th, +2, ITI., டிப்ளமோ (ம) பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 33 வயதுடைய பழங்குடியினர் பங்கேற்கலாம்.

News January 18, 2025

நாமக்கல்: இன்றைய கறிக்கோழி, முட்டை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (18-01-2025) நிலவரப்படி கறிக்கோழி பண்ணை விலை (உயிருடன்) கிலோ ரூ.98-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.83-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் முட்டை விலை 460 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்றைய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விலையில் மாற்றம் செய்யப்படாததால், முட்டை விலை மாற்றம் இன்றி 460 காசுகளாக நீடித்து வருகிறது.

News January 18, 2025

வெற்றிலை மாலையுடன் ஆஞ்சநேயர் அருள் பாலிப்பு

image

நாமக்கல் நகர மையத்தின் நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் வணங்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் சுவாமி அருள் பாலித்து வருகிறார். இன்று தை மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. வெற்றிலை ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான மாலைகள் ஆஞ்சநேயர் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டன. அதிகாலை முதலிலேயே ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்தனர்.

News January 18, 2025

ஜல்லிக்கட்டு: நாமக்கல்லில் அமைச்சர் தொடங்கிவைப்பு

image

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், எருமப்பட்டி ஒன்றியம், பொன்னேரி, கைக்காட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. போட்டியை, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

News January 17, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 17ந் தேதி நடைபெற்றது அந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.60 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.60 ஆகவே நீடிக்கிறது

News January 17, 2025

நாமக்கல் மருத்துவ மாணவிக்கு குவியும் பாராட்டு

image

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி துளசிமதிமுருகேசன் பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டி பரிசும் வழங்கி வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரர்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்மு அவர்களிடமிருந்து இன்று பெற்றுக் கொண்டார். அவருக்கு நாமக்கல் மாவட்ட மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

News January 17, 2025

கேரளா ஆளுநரிடம் நாமக்கல் எம்.பி மனு

image

இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாராளுமன்ற நிலைக்குழு (சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்) கூட்டத்தில் பங்கேற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் MP அவர்கள் கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். மருத்துவ கழிவுகளை தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவதை தவிர்க்கவும் போன்ற பல்வேறு கோரிக்கை இடம்பெற்றது.

error: Content is protected !!