India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில், வரும் (28-08-2025) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ‘உயர்வுக்கு படி’ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்விக்கடன், கல்லூரி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகை விண்ணப்பித்தல், அரசு கலை (ம)அறிவியல் கல்லூரி/ பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி சேர்க்கை உள்ளிட்ட வாய்ப்புகள் செய்து தரப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 25) நாமக்கல்-கோவிந்தராசன்,94981 70004, இராசிபுரம் சங்கரபாண்டியன் – 9655230300, தி.கோடு- வளர்மதி 825405987, வேலூர் – ஷாஜகான் 9498167357 ஆகியோர் பணியில் ஈடுபட உள்ளனர்.

நீங்களும் எஸ்பிஐ-யில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. எஸ்பிஐ வங்கியில் 5180 Clerk Junior Associates மற்றும் Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி போதும், சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும்.இதற்கான தேர்வு கோவையில் நடைபெறும். விண்ணபிக்க இங்கே <

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத முதல் திங்கட்கிழமையையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. காலை 10:30 மணியளவில், ஆஞ்சநேயர் சுவாமிக்கு பலவித வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

நாமக்கல் மக்களே, மத்திய அரசின் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் தேசிய அளவில் செயல்படும் 11 ஆலைகளில் காலியாக உள்ள 515 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

▶️முதலில் <
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE) <<17511363>>தொடர்ச்சி<<>>

நாமக்கல் மக்களே.., அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே கிளிக் செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE)

நாமக்கல் மக்களே.., ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.5 கோடி வரையிலான கடனுதவி NEEDS திட்டத்தின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. நாமக்கல்லில் முட்டை வியாபாரம், தொழில் தொடங்க நினைப்போர் இத்திட்டத்தில் பயனடையலாம். இந்தக் கடனை திரும்பி செலுத்த 9 ஆண்டு கால அவகாசம், மானியத்துடன் 3% வட்டிக்கு வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <

நாமக்கல்: திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட இளநகர் துணை மின் நிலையத்துல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று(ஆக.25) வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, செக்குப்படிபாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரிய மணலி, கோக்கலை மற்றும் மாணிக்கம்பாளையம் பகுதிகளில் காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE IT)

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தாலும், விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் விலை ரூ.5 ஆகவே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.