India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு பரமத்திவேலூர், நாமக்கல் மற்றும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய நாமக்கல் மேற்கு மாவட்ட கழகத்திற்கு என். சதீஷ்குமார் மாவட்டக் கழகச் செயலாளராக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இணைச் செயலாளராக எஸ்.சதீஷ்குமார் , பொருளாளர் பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் இளையராஜா, மோகன் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்களையும் நியமித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (24/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு – இமயவரம்பன் (94982030141), வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
வருகின்ற 25/01/25 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திமுக கட்சியின் இளைஞரணி சார்பாக நாமக்கல் பூங்கா சாலையில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் தலைமை தாங்குகிறார். நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேச உள்ளார்.
ப.வேலூர் காவிரிஆற்று வாய்க்காலில் பறவைகள் வேட்டையாடப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின்பேரில் வனத்துறையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நீர் காகங்களை வேட்டையாடிக் கொண்டிருந்த எஸ்.கொந்தளம் பகுதியைச் சேர்ந்த மீன்பிடிக்கும் தொழிலாளி முருகானந்தம் (35) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். அவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று, நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.104 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.83 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு வட்டத்தில் கள ஆய்வின் போது ஆதரவின்றி இருந்த பெண்ணை முதியோர் இல்லத்தில் சேர்க்க உடனடி நடவடிக்கை எடுத்தார். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பல கூட இருந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (23/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – ரங்கசாமி (9487539119), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் போலீசார் நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுகிய காணொளி (Reels )உருவாகும் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் நாமக்கல் மாவட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் வரும் 27.01.2025 முன் தங்கள் படைப்பை பதிவு செய்யலாம். இதில் முதல் பரிசாக ₹10,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், புதிய குடும்ப அட்டை கோருதல், கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க குறைதீர் முகாம் நாளை மறுநாள் ஜன.25 (சனிக்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம், வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.