Namakkal

News September 11, 2025

நாமக்கல் : விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

image

நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில், தமிழக அரசின் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. நாமக்கல்லில் உள்ள அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் சவுக்கு, தேக்கு, மகாகனி ஆகிய மரக்கன்றுகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

News September 11, 2025

பேளுக்குறிச்சி முருகன் கோயிலின் தனிச்சிறப்பு!

image

நாமக்கல்: சேந்தமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த பேளுக்குறிச்சி கிராமத்தில் பழனியப்பர் கோயில் உள்ளது. மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். ஆனால், இந்த கோயிலில் சேவலை முருகன் கையில் அடக்கி வைத்திருப்பது தனிச்சிறப்பு. மூன்றரை அடி உயரமுள்ள இந்த முருகன் சிலையை பின்பற்றியே, போகர் பழநியில் உள்ள நவபாஷாண முருகப்பெருமான் சிலை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. உடனே SHARE!

News September 11, 2025

நாமக்கல்லில் தேர்வின்றி அரசு வேலை!

image

நாமக்கல் மக்களே.., நமது மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்த வேலைக்கு தேர்வு எழுத அவசியம் இல்லை. 8ஆவது, 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவத்திற்கு <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செப்.15ஆம் தேதிக்குள் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உடனே SHARE!

News September 11, 2025

நாமக்கல்லில் கல்வி கடன் முகாம்

image

நாமக்கல் கோட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டிற்கான கல்வி கடன் வழங்குவதற்கான முகாம் மாரப்பநாயக்கன்பட்டி கிராமம், சி.எம்.எஸ் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் வருகிற செப்.20ஆம் தேதி அன்று காலை 9.00 மணி முதல் 1.00 மணிவரை நடைபெற உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 11, 2025

நாமக்கல்லில் இனி இது கட்டாயம்!

image

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை வளர்ப்பவர்கள், அதற்கான உரிமத்தை மாநகராட்சியில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழையும் இணைத்து, உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல், நாய்களை தெருவில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

News September 11, 2025

நாமக்கல் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

image

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால், அவற்றை பிடிப்பதற்காக மாநகராட்சி சார்பில் தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிலர் பணியாளர்களை நாய்களை பிடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இதையடுத்து, நாய்களை பிடிப்பவர்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News September 11, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று செப்டம்பர்.10 நாமக்கல் – ராஜ்மோகன் (9442256423), வேலூர் – ரவி ( 9498168482), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – டேவிட் பாலு ( 9486540373), திம்மன்நாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ (9994497140) ஆகியோர் உள்ளனர்.

News September 10, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 10) இரவு நேர ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் 100 என்ற எண்ணையும் அழைக்கலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

நாமக்கல் இரயில் பயணிகளுக்கு அறிவிப்பு!

image

நாமக்கலில் இருந்து நாளை (செப்.11) நள்ளிரவு 1:20 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம்(துவ்வாடா), புவனேஸ்வர், கரக்பூர், கல்கத்தா(அண்டோல்), துர்காபூர், அசன்சோல், ஜசிதிஹ், பரூனி போன்ற பகுதிகளுக்கு செல்ல 06059 மதுரை – பரவ்னி AC ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளது.

News September 10, 2025

நாமக்கல்: நாய்களுக்கு உரிமம் பெறாமல் இருந்தால் அபராதம்!

image

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை வளர்ப்பவர்கள், அதற்கான உரிமத்தை மாநகராட்சியில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழையும் இணைத்து, உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல், நாய்களை தெருவில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!