Namakkal

News September 23, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்று (23-09-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோவுக்கு ரூ.108- ஆகவும், முட்டை கோழி விலை கிலோவுக்கு ரூ. 107- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News September 23, 2025

நாமக்கல் அருகே மாமியாரை வெட்டிய மருமகன்!

image

நாமக்கல்: புதுச்சத்திரம், திருமலைப்பட்டி காந்தி தோட்டத்தை சேர்ந்தவர் ஜோதி. குடும்ப தகராறு காரணமாக கணவர் சின்ராசுவை (46) பிரிந்து தாயாருடன் வசித்து வந்தார். இதனிடையே திருமலைபட்டிக்கு சென்ற சின்ராசு, மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி மாமியார் ராணியுடன் தகராறில் ஈடுபட்டு, அரிவாள் மனையால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. ராணியின் புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் சின்ராசுவை கைது செய்தனர்.

News September 23, 2025

நாமக்கல் மக்களுக்கு இன்று SUPER வாய்ப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (23.09.2025) செவ்வாய்க்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் நாமக்கல் மாநகராட்சி வீசாணம் அரசு துவக்கப்பள்ளி, திருச்செங்கோடு காவிரி நாயுடு திருமண மண்டபம், இராசிபுரம் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் மண்டபம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராம ஊராட்சி சேவை மையத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE பண்ணுங்க!

News September 23, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்துப் பணி விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (22.09.2025) நான்கு சக்கர வாகன ரோந்துப் பணிகள் அதிகாரிகள் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் பகுதியில் SSI தேசிங்கன் (86681-05073), ராசிபுரத்தில் SSI சின்னப்பன் (94981-69092), திம்மாநாயக்கன்பட்டியில் SSI ரவி (94981-68665) ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News September 22, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (22.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

நாமக்கல்: 12th போதும்.. எல்லைப் பாதுகாப்பு படையில் வேலை!

image

நாமக்கல் மக்களே, மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கீழ் எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் 1,121 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்பிக்கலாம். நாளை (23.09.2025) கடைசி ஆகும். இதை வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 22, 2025

நாமக்கல்: கிராம வங்கி வேலை.. கடைசி வாய்ப்பு!

image

நாமக்கல் மக்களே, இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம், காலியாக உள்ள கிராம வங்கி உதவியாளர் பணிக்காக வரும் செப்.28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு மாதம் ரூ.35,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News September 22, 2025

நாமக்கல் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

நாமக்கல்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 22, 2025

நாமக்கல்: EPFO உறுப்பினர்களே – இனி கவலை வேண்டாம்!

image

நாமக்கல் மக்களே..EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN Number-ஐ மறந்துவிட்டீர்களா? EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <>கிளிக் <<>>செய்து மீட்கலாம்.
1. EPFO Portal – Know Your UAN பக்கம் செல்லவும்.
2. உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
3. OTP-ஐ மொபைலில் பெற்று உறுதிப்படுத்தவும்.
4. சரியான விவரங்கள் வழங்கப்பட்டால், உங்கள் UAN எண்ணை திரும்ப பெறலாம்.

News September 22, 2025

நாமக்கல்: FREE.. வீடு கட்டப் போறீங்களா?

image

நாமக்கல் மக்களே, வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE யாக செய்ய ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!