India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மண்டலத்தில் இன்று(செப்.27) கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.111 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கறிக்கோழி விலை ரூ.123 ஆக இருந்த நிலையில், நேற்று(செப்.26) நடந்த கூட்டத்தில் ரூ.12 குறைக்கப்பட்டது. சந்தையில் இதன் விலை ரூ.130 முதல் ரூ.170 வரை விற்பனையாகிறது. இதனால், பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முட்டைக் கோழி விலை ரூ.107 ஆக உள்ளது.

நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் இன்று(செப்.27) பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல்: காலை 8:30 மணிக்கு ராசிபுரத்தில் நடைபெறும் இலவச மருத்துவ முகாமிலும், காலை 9 மற்றும் 10:30 மணி நாட்டாமங்கலம் மற்றும் தோளூர் பகுதியில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் பாலகம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று(செப்.27) முதல் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று(செப்.27) 5 மி.மீ, நாளை(செப்.28) 1 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 95 டிகிரியும், குறைந்தபட்சமாக 77 டிகிரியும் இருக்கக் கூடும்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (செப். 26) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் நாளைய பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களாக விலை உயர்வாக காணப்பட்டது. தற்போது, புரட்டாசி மாதம் என்பதால் முட்டையின் நுகர்வு குறைந்துள்ளது. இதன் காரணமாகவே, முட்டையின் விலை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (26.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து நாமக்கல் வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி 20671 என்ற எண் கொண்ட மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலின் கால அட்டவணை:- மதுரை – 5:15 (காலை) திருச்சி – 7:00 (காலை) நாமக்கல் – 8:28/8:30 (காலை) கிருஷ்ணராஜபுரம் – 12:32 (மதியம்) பெங்களூரூ cantt – 1:00 (மதியம்) சென்றடையும் என தென்னக ரயில்வே சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் வழியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களே, தேர்வில்லாமல் தமிழ்நாடு அரசின் வேலை வேண்டுமா? TN Rights திட்டத்தில் அலுவலக உதவியாளர், பல்நோக்கு பணியாளர் என 1,096 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.12,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நாமக்கல் மக்களே.., தமிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்கத்தில் Call operator, Helpline administrator ஆகிய பதவிகளுக்கு 12 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும். <

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச லாரி டிரைவர் பயிற்சி நாமக்கல்லில் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமான தகுதி. மொத்தம் 33 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

1) நாமக்கல் மக்களே.., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
2)பால் பண்ணை, பால் கடை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, கால்நடைகள் உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும்.
3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு.
4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)
Sorry, no posts matched your criteria.