India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல், மோகனூரை தலைமை இடமாக கொண்டு விவசாய முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது அதன் பொதுச்செயலாளராக பாலசுப்ரமணியன் இருந்து வருகிறார். இந்த அமைப்பு பொதுமக்களுக்காக போராடி வருகிறது. இதனிடையே காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக முயற்சி செய்கிறது. இதை தடுப்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு விமுக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் ஹிந்தியில் கடிதம் எழுதியுள்ளார்.
நாமக்கல் – சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை இன்று மதியம் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஆய்வு செய்தார். அப்போது, ரயில் நிலையத்தில் சீரமைக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் எனவும், அனைத்து பகுதிகளிலும் விளக்குகள் இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், ரயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என்றும் கேட்டறிந்தார்.
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு இன்று 11 மணி அளவில் பல்வகை வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக முத்தங்கி சாற்றப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்ட, மாநில பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் பெற்று சென்றனர்.
நாமக்கல்லில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் பேசிய அவர், கட்சியில் சரியாக பணியாற்றவில்லை என்றால், கண்டிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. அதிமுக ஆட்சி அமைக்கும் போது அரிசி அட்டை வைத்துள்ளவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்றார்.
நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு சுவற்றில் விளம்பர மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதனை நேற்று நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி சுவற்றை சுத்தப்படுத்தினர். இந்நிலையில் அந்த சுவற்றில் அரசின் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாநகராட்சியில் ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூகம் ஒவ்வொரு மாதமும் 2, 4வது சனிக்கிழமையில், நகரின் பல்வேறு இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பேருந்து நிலையம், பூங்கா ரோடு ஆகிய இடங்களில் உள்ள பொதுச்சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றப்பட்டது.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். மேலும், பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் 2041 மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்.
எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் +1 மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த பள்ளி உதவி தலைமையாசிரியரை முற்றுகையிட்டு மாணவரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவணி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று 11 மணி அளவில் ஆஞ்சநேய பகவானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் என பலவகை வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
நாமக்கல், வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ், ரித்திஷ்) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தார். எனவே ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரை ஆகாஷ் உடலை வாங்க போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாக உள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவரின் பெற்றோரிடம் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
Sorry, no posts matched your criteria.