Namakkal

News August 27, 2024

நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில் மாநில பேச்சுப் போட்டி

image

நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில் ஆக.31ஆம் தேதி மாநில பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில், அனைத்து வகை கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம். ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 3 போ் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ஆம் பரிசு ரூ.5 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

News August 27, 2024

நாமக்கல் மாவட்ட செயலாளர் உதயநிதியுடன் சந்திப்பு

image

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் நேரில் சந்தித்தார். அப்போது, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மதுராசெந்திலிடம் கேட்டறிந்து, உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

News August 26, 2024

நாமக்கல் மருத்துவ மருந்து வணிகர் சங்கம் எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட மருத்துவ மருந்து வணிக சங்கம் இன்று எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கட்டாயமாக கருக்கலைப்பு சம்பந்தமான மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், இது குறித்து அனைத்து கடைகளிலும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

News August 26, 2024

நாமக்கல்லில் 2,000 விபத்து வழக்குகள் பதிவு

image

நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 2,000 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

News August 26, 2024

கொல்லிமலையில் துறவியர்கள் மாநாடு

image

கொல்லிமலையில் வரும் 8ம் அகத்தியர் அறக்கட்டளை துர்வாசகர் பவுண்டேஷன் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அறப்பளீஸ்வரர் ஆலயம் அருகில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோ பூஜை உலக நன்மைக்காக யாகம் துறவியர் மாநாடு அன்னதானம் உள்ளிட்டவர்கள் நடைபெற உள்ளது. சைவ ஆதீனங்கள் வைணவ ஜின்கள் கோவில் பூசாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள் தொடர்புக்கு 94459 13417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News August 26, 2024

குமாரப்பாளையம் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

குமாரபாளையம் அருகே சடையப்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமன்(75). இவர் நேற்று இரவு சுமார் 11.40 மணியளவில் அதே பகுதியை சாலையை கிடைக்கும் போது, அவ்வழியாக வேகமாக வந்த பைக் இவர் மீது மோதியது. அதில் ராமன் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்தார். இவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News August 26, 2024

உலக சாதனை சிலம்பம் போட்டி நிகழ்வு

image

நாமக்கல்லில் போலியோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3000 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும், சிலம்பம் பயிற்சி நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் இன்று 26ஆம் தேதி காலை 8 முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் இடைவிடாது நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, எஸ்.பி ராஜேஸ்கண்ணன், எம்.பி, எம்எல்ஏ-க்கள் கலந்து கொள்கின்றனர்.

News August 26, 2024

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

image

ப.வேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி (ம) வண்ணம் பூசும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. காமதேனு விநாயகர், பாம்பின் மீது அமர்ந்து செல்லும் விநாயகர், தாமரை மீது அமர்ந்த விநாயகர், பஞ்சமுக விநாயகர், மும்மூர்த்தி விநாயகர், மயில்வாகனத்தில் அமர்ந்து செல்வது போன்ற விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

News August 25, 2024

ஹிந்தியில் கடிதம் எழுதிய தமிழக கட்சி

image

நாமக்கல், மோகனூரை தலைமை இடமாக கொண்டு விவசாய முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது அதன் பொதுச்செயலாளராக பாலசுப்ரமணியன் இருந்து வருகிறார். இந்த அமைப்பு பொதுமக்களுக்காக போராடி வருகிறது. இதனிடையே காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக முயற்சி செய்கிறது. இதை தடுப்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு விமுக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் ஹிந்தியில் கடிதம் எழுதியுள்ளார். 

News August 25, 2024

நாமக்கல் ரயில் நிலையத்தை எம்பி ஆய்வு

image

நாமக்கல் – சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை இன்று மதியம் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஆய்வு செய்தார். அப்போது, ரயில் நிலையத்தில் சீரமைக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் எனவும், அனைத்து பகுதிகளிலும் விளக்குகள் இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், ரயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என்றும் கேட்டறிந்தார்.

error: Content is protected !!