Namakkal

News January 16, 2025

நாமக்கல்லுக்கு வந்தடைந்த 2600 டன் கோதுமை

image

நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ரயில் நிலையத்திற்கு நேற்று பஞ்சாப் மாநிலத்திலிருந்து 42 பெட்டிகளில் 2600 டன் கோதுமை நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தது. இவற்றை சுமார் 150 லாரிகள் மூலம் நல்லிபாளையத்தில் உள்ள தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கிடங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து நாமக்கல் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News January 16, 2025

BREAKING நாமக்கல்: Ex எம்எல்ஏ காலமானார்!

image

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்றத்தின் முன்னாள் அதிமுக உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் வயது மூப்பின் காரணமாக இன்று காலை மறைந்தார். இவர் 1996 மற்றும் 2001ல் அதிமுக இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2004ம் ஆண்டு நாமக்கல் நாடளுமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஜூலை 11ல் திமுகவில் இணைந்தார்.

News January 16, 2025

2 நாளில் ரூ.34.77 லட்சத்துக்கு காய்கறி விற்பனை

image

நாமக்கல் உழவர் சந்தையில் மாட்டு பொங்கலையொட்டி நேற்று 31 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.13 லட்சத்து 89 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை யொட்டி 45 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இவை ரூ.20 லட்சத்து 88 ஆயிரத்துக்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.34 லட்சத்து 77 ஆயிரத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனையாகின.

News January 16, 2025

பொங்கல்: நாமக்கல்லில் கரும்புகள் தேக்கம்

image

நாமக்கல்லில் கரும்புகளை விற்பனைக்கு கொண்டு வந்த சிறு வியாபாரிகள், போதிய அளவில் விற்பனையாகாததால் கவலையடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு விநியோகிக்கப்பட்டதால் பெரும்பாலான மக்கள் கரும்புகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. மேலும், முன்பிருந்ததுபோல இளைஞா்கள், சிறுவா்கள் கரும்பு சாப்பிட விரும்புவதில்லை என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

News January 15, 2025

நாமக்கலில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 15ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, பணி, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆகவே நீடிக்கிறது.

News January 15, 2025

வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10.30 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் மாலை வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

News January 15, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (15/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177823), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – கெங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News January 15, 2025

பாலமேடு ஜல்லிக்கட்டில் நாமக்கல் வீரர் அசத்தல் 

image

பொங்கல் திருவிழாவின் முக்கிய அம்சமாக மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாட்டு பொங்கல் தினமான இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் 2 காளைகளை பிடித்து நாமக்கல்லுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

News January 14, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (14/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – செல்லத்துரை( 9498112048), ராசிபுரம் – சுகவானம் (9498174815), திருச்செங்கோடு – உதயகுமார் (9498169032), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News January 14, 2025

மாணவர்கள் பட்டதாரிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 10-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி பழங்குடியின இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு நிகழ்வு, வரும் 19ஆம் தேதி இராசிபுரம் முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் ‘Skill Training’ காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது என ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!