India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (18-01-2025) நிலவரப்படி கறிக்கோழி பண்ணை விலை (உயிருடன்) கிலோ ரூ.98-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.83-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் முட்டை விலை 460 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்றைய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விலையில் மாற்றம் செய்யப்படாததால், முட்டை விலை மாற்றம் இன்றி 460 காசுகளாக நீடித்து வருகிறது.

நாமக்கல் நகர மையத்தின் நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் வணங்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் சுவாமி அருள் பாலித்து வருகிறார். இன்று தை மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. வெற்றிலை ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான மாலைகள் ஆஞ்சநேயர் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டன. அதிகாலை முதலிலேயே ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்தனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், எருமப்பட்டி ஒன்றியம், பொன்னேரி, கைக்காட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. போட்டியை, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 17ந் தேதி நடைபெற்றது அந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.60 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.60 ஆகவே நீடிக்கிறது

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி துளசிமதிமுருகேசன் பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டி பரிசும் வழங்கி வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரர்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்மு அவர்களிடமிருந்து இன்று பெற்றுக் கொண்டார். அவருக்கு நாமக்கல் மாவட்ட மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாராளுமன்ற நிலைக்குழு (சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்) கூட்டத்தில் பங்கேற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் MP அவர்கள் கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். மருத்துவ கழிவுகளை தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவதை தவிர்க்கவும் போன்ற பல்வேறு கோரிக்கை இடம்பெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (17/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சிவா (9003448017), திருச்செங்கோடு – மலர்விழி (9498109579), வேலூர் – இந்திராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

பள்ளிபாளையம் நகராட்சியுடன் எலந்தகுட்டை ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று பள்ளிபாளையம் சங்ககிரி பிரதான சாலை வெப்படை நான்கு ரோடு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திமுக நாமக்கல் கிழக்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் சிலம்பரசனின் தந்தை ஆறுமுகம் மறைவையொட்டி எம்பி ராஜேஷ்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் அவருடைய இல்லத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்வின்போது துணை மேயர் பூபதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வெள்ளை உடையணிந்து இருந்த வள்ளுவரை, ஆளுநர் ஆர்.என். ரவி காவி உடையை மாற்றியதை கண்டித்து, நாமக்கல்லில், ஆளுநருக்கு காவி உடையை, அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர் காந்தியவாதி ரமேஷ், அனுப்பினார். நாமக்கல் தலைமை அஞ்சலகம் மூலம், தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இனி தமிழக ஆளுநர் ஆர் அன் ரவி காவி உடை அணிய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
Sorry, no posts matched your criteria.