India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் மேட்டுப்பட்டியில் சிவ ஆலயம் அமைந்துள்ளது. இந்த சிவ ஆலயத்தில் இன்று காலை ஆறு முப்பதிலிருந்து ஆறு 45 வரை கால் மணி நேரம் மூலவர் சிவபெருமான் மீது சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மூலவர் சிவனையும் இந்த அதிசய நிகழ்வினை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல் உழவர் சந்தையானது கோட்டை சாலையில் அமைந்துள்ளது இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் தக்காளி 40 ரூபாய் கத்திரிக்காய் 60 வெண்டைக்காய் 24 ரூபாய் புடலங்காய் 24 பீர்க்கங்காய் 48 எலுமிச்சம்பழம் 100 ரூபாய் பெரிய வெங்காயம் 64 ரூபாய் சின்ன வெங்காயம் 40 ரூபாய் இஞ்சி 155 ரூபாய். என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏராளமான பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று 30/09/2024 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெறுகிறது. இதில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்து தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார் .
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி தேர்வுகளுக்கு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வியாழக்கிழமை (3/10/2024) காலை 10 மணி முதல் மதியம் 1:30 வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் நிலவும் வானிலையில், இன்று 40 மி.மீட்டரும், நாளை (திங்கட்கிழமை) 18 மி.மீட்டரும், நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) 14 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும் என கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாதம் பிறந்து இரண்டாவது சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டுள்ளது. நாமக்கல்லில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி மாதத்தில் முட்டை நுகர்வு சற்று குறையும் இதனால் முட்டை விளையும் குறையும் என கருதப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாகவே ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தொடர்ந்து ரூ 5.05 பைசா என்ற அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் உழவர் சந்தை கோட்டை சாலையில் அமைந்துள்ளது இங்கு நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் பணம் மற்றும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் இன்று நாமக்கல் உணவு சந்தையில் தக்காளி கிலோ 30 ரூபாய் வெங்காயம் 45 ரூபாய் கேரட் அறுவது ரூபாய் பீட்ரூட் 40 ரூபாய் முருங்கைக்காய் 75 ரூபாய் எலுமிச்சம்பழம் நூறு ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இராசிபுரம் போடிநாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு 2 பிக்கப் லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் பயணித்த 7 நபர்கள் ராசிபுரம் மற்றும் சேலம் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பேளுக்குறிச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் பிறந்து இரண்டாவது சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டுள்ளது. நாமக்கல்லில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி மாதத்தில் முட்டை நுகர்வு சற்று குறையும் இதனால் முட்டை விளையும் குறையும் என கருதப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாகவே ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தொடர்ந்து ரூ 5.05 பைசா என்ற அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி அனைத்து துறையின் முதல் நிலை அலுவலர்கள். தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாமக்கல் ஆட்சியர் உமா தலைமையில் வரும் 30ம் தேதி திங்கள் கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.