Namakkal

News October 14, 2024

கலப்படமற்ற இனிப்பு வகைகள் தயாரிக்க அறிவுறுத்தல்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நடைபெறுகிறது. ஹோட்டல்கள் பேக்கரிகள் (ம) தனியாக இணைப்பு (ம) காரம் தயாரிக்கும் இடங்களில் கலப்படம் இல்லாமல் திண்பண்டங்களை செய்ய வேண்டும் எனவும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மறுமுறை பயன்படுத்தக்கூடாது எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

தேசிய கல்வி உதவித் தொகை பெற விண்ணபிக்கலாம்

image

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https:/scholarshipsgov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்திலும் (http//socialjustice.gov.in) என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

image

குமாரபாளையத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைடுத்து குமாரபாளையம் போலீசார் இன்று தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது காட்டூர் விட்டலபுரி பகுதியில் லாட்டரி விற்றது தெரியவந்தது. அங்கு நேரில் சென்ற போலீசார், லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த சசிகுமார், பிரபு, மணிகண்டன், நாகராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

News October 13, 2024

நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி, கறிக்கோழி கிலோ பண்ணை விலை (உயிருடன்) ரூ.114க்கும், முட்டை கோழி கிலோ ரூ.107க்கும் விற்பனையாகி வருகின்றன. மேலும், முட்டை விலையை பொறுத்தவரையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மாற்றம் இன்றி ரூ.5.05 காசுகளாக நீடித்து வருகிறது.

News October 12, 2024

156வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

image

நாமக்கல்: மோகனூர் வட்டம் வளையப்பட்டி, என் புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சில பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதனிடையே இன்று 12ம் தேதி வளையப்பட்டியில் 156 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் சிப்காட் எதிர்ப்பாளர்கள் ஈடுபட்டனர். இதில் விவசாய தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

News October 12, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 168.70 மி.மீ மழை பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்; எருமப்பட்டி 5 மி.மீ, குமாரபாளையம் 38.20 மி.மீ, மங்களபுரம் 5.20 மி.மீ, நாமக்கல் 17 மி.மீ, பரமத்திவேலூர் 7 மி.மீ, புதுச்சத்திரம் 3.30 மி.மீ, ராசிபுரம் 3 மி.மீ, சேந்தமங்கலம் 43 மி.மீ, திருச்செங்கோடு 26 மி.மீ, ஆட்சியர் அலுவலகம் 10 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 11 மி.மீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 168.70 மிமீ மழை பதிவாகி உள்ளது.

News October 12, 2024

நாமக்கல்லில் 155ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

image

நாமக்கல், மோகனூர் வட்டம் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சில பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று இரவு வலையப்பட்டியில் 155ஆவது நாளாக சிப்காட் எதிர்ப்பாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சமூக ஆர்வலர்கள் விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

News October 11, 2024

நாமக்கல்லில் பூக்கள் விலை குறைவு

image

நாமக்கல் பூ மார்க்கெட்டின் விலை நிலவரம்: நேற்று 600 ரூபாய்க்கு விற்கபட்ட மல்லிகை இன்று 400ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய பூக்களின் விலை நிலவரங்கள் சம்மங்கி ரூ.200-160, அரளி ரூ.150, மல்லி ரூ.400-240, பட்டன் ரோஸ் ரூ.300-240, பன்னீர் ரோஜா ரூ.100-70 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை என்பதால் அதிக அளவு பூக்கள் விற்பனை ஆகின்றன.

News October 11, 2024

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

image

நாமக்கல்: எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த +2 மாணவி – அரவிந்த் (23) ஆகியோர் காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கி பழகியதால் மாணவி கருவுற்று இருக்கிறார். பின்னர், வீட்டிற்கு தெரியாமல் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி உட்கொண்டிருக்கிறார். இதனால், அச்சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அரவிந்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

News October 11, 2024

நாமக்கல்லுக்கு சீமான் வருகை

image

நாமக்கல்லில் இயங்கி வந்த மாவட்ட தலைமை மருத்துவமனை மூடப்பட்டதை கண்டித்தும், ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்றத்தை கண்டித்தும்,
வளையப்பட்டியில் சிப்காட் அமைப்பதை கண்டித்தும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாமக்கல் பூங்கா சாலையில் அக்.18ஆம் தேதி மாலை நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்ள உள்ளார்.

error: Content is protected !!