India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் பிரசித்தி பெற்றது. ஆவணி மாத வியாழனை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் ஆஞ்சநேய பகவானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டுஅபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்ககவசம் சாற்றப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான தரிசனம் பெற்றுச் சென்றனர்.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயம் – பேராசிரியர் கூட்டரங்கில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னுசாமி, இராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நாமக்கல் எம்பி ராஜேஷ்குமார் கலந்துகொண்டு கட்சியின் ஆக்க பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 34 அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பின்பற்றிட வேண்டுமென என ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தமட்டில், கல்லூரி செயல்பட தொடங்கியதில் இருந்து மூன்று ஆண்டுகளில் காலியிடமின்றி 300 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றனா். நிகழாண்டில், நீட் தோ்வு முடிவுகள் வெளியீடு சா்ச்சை தொடா்பாக நாடு முழுவதும் இளநிலை மருத்துவக் கலந்தாய்வு நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. நாமக்கல் மருத்துவக் கல்லூரியில் 33 மாணவர் மாணவிகள் சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செங்கோடு கோம்பை நகர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒரு லிங்க் வந்துள்ளது. இதில் டிரேடிங் செய்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என நம்பிய பெண் ரூ.8.81 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கில் இருந்து அனுப்பியுள்ளார். அதில் ரூ.10,000 மட்டுமே வங்கி கணக்கிற்கு திரும்பியது. மீதமுள்ள ரூ.8.71 லட்சம் திரும்பவில்லை. இது குறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிராம் போலீசில் புகார் அளித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் ச.உமா தலைமையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் படித்துறைகளில் மட்டுமே சிலைகள் கரைக்க அனுமதி வழங்கியுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
மாடி தோட்டம் மற்றும் பழ செடி தொகுப்புகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் பயனாளிகள் இணைய வழியில் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என நாமக்கல் தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திக் தெரிவித்துள்ளார். இணைய வழியில் பதிவு செய்ய முடியாத விவசாயிகள் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம். மேலும் தென்னங்கன்று ரூ.65 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 16800 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உமா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சியில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
நாமக்கல்லில் பன்றிகளை வேட்டையாட பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி வெடித்து விவசாயி சுப்பிரமணி காலில் காயமடைந்தது. நாட்டுத்துப்பாக்கியின் லிவரில் கயிறு கட்டிவைக்கப்பட்ட நிலையில் சுப்பிரமணி மிதித்ததால் காலில் சுடப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . யார் நாட்டுத்துப்பாக்கியை வைத்தது என எருமப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
“தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ல் மாநில அரசின் விருது” 2024-25ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இவ்விருதுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.233, 234 கூடுதல் கட்டிடம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் தொலைபேசி 04286-299460 தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.