India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நாவலடி கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் எல்லா நாளுமே சுவாமிக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. எனவே, இவருக்கென தனியே விழா எதுவும் கிடையாது. இவரிடம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தொடர்ச்சியாக படையல் படைத்து வழிபடுகின்றனர். எனவே, இவருக்கு ‘படையல்சாமி’ என்றொரு பெயரும் உண்டு. இங்கு பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.

உணவு பாதுகாப்புத் துறை சார்பாக பள்ளிப்பாளையம் ஒட்டமெத்தை” ஈக்காட்டூர் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூன்று கிலோ பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் காலாவதியான குளிர்பானங்கள் தின்பண்டங்கள் 6 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இரண்டு கடைகளுக்கு தலா ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

குமாரபாளையம், எக்ஸல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு வேளாண் பொறியியல் துறை மாணவி செல்வி. கீர்த்தனாவிற்கு மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தேசத்தின் அடையாளம் விருது 2025 – பல குரல் நாயகி விருது கோவையில் வழங்கப்பட்டது. விருதை பெற்ற மாணவிக்கு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (13/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் 13ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம் குமாரபாளையம் 26.40 மி.மீ, மோகனூர் 12 மி.மீ, நாமக்கல் 11.50 மி.மீ, பரமத்தி வேலூர் 10 மி.மீ, ராசிபுரம் 6.20 மி.மீ, சேந்தமங்கலம் 29 மி.மீ, திருச்செங்கோடு 26 மி.மீ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 17.20 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 19 மி.மீ என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 157.30 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:34 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் உள்ளன.

கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நாமக்கல் நைனாமலை வரதராஜ பெருமாள்கோவில். இங்கிருக்கும் பெருமாளை வழிபட்டால், திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு மனமுருகி வேண்டிக்கொண்டால் செல்வம் பெருகும், மன அமைதி மற்றும் நல்ல வாரிசுகள் அமையும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (12/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நாமக்கலில் இன்று நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 3.80 என நிர்ணயம் செய்யப்பட்டது. கோடை காலம், தீவன விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முட்டையின் நுகர்வு சற்று குறைந்தது. இதன் காரணமாக முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ3.80 ஆக நீடிக்கிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில் எயிலிநாதர் கோயில் அமைந்துள்ள. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. மேலும், கி.பி.10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது. இங்கு திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க பிரார்த்திக்கலாம்.
Sorry, no posts matched your criteria.