Namakkal

News April 3, 2025

நாமக்கல்: நாளை சிறப்பு ரயில் இயக்கம்!

image

நாமக்கலில் இருந்து நாளை 3ஆம் தேதி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:34 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம்.

News April 2, 2025

நாமக்கலின் திருப்பதி பெருமாள் கோவில்

image

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீக்கும் மேலும் திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் சுமையில் உள்ள நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 2, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்ட வானிலையை பொறுத்தவரையில், இன்று ஒரு மி.மீட்டரும், நாளை (வியாழன்) 5 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 7 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.6 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 2, 2025

நாமக்கல்லில் TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி!

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 01.04.2025 அன்று வெளியிட்ட TNPSC GROUP – 1 தேர்விற்கான 70 காலிப்பணியிடங்களுக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 08.04.2025 முதல் மதியம் 2.30 முதல் 5.30 வரை இலவச பயிற்சி வகுப்பு, மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விரும்பும் மனுதாரர்கள், <>இந்த லிங்க்கில்<<>> உள்ள Google Form-யை நிரப்பவும். பிறர் பயன்பெற இதை SHARE பண்ணுங்க!

News April 2, 2025

நாமக்கல் மக்களே இந்த 2 நாட்கள் கவனம்!

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக வரும் ஏப்ரல் 4,5 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை SHARE பண்ணுங்க!

News April 1, 2025

பிரிந்த தம்பதிகளை சேர்த்துவைக்கும் ஆலயம்

image

நாமக்கல், திருச்சொங்கோட்டில் அர்த்தநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, உடலில் ஒரு பாதி ஆணாகவும், மறுபாதிப் பெண்ணாகவும் சிவபெருமாள் உள்ளார். இக்கோவில் சென்று சிவனை வழிபட இல்லறவாழ்வில் பிரிந்து வாழும் தம்பதிகள், மீண்டும் வாழ்வில் சேர்ந்து வாழ்வாதகாக சொல்லப்படுகிறது. மேலும், திங்கள், பௌர்ணமி, அமாவாசை முதலான நாட்களில் வீட்டில் அர்த்தநாதீஸ்வரரை விளக்கேற்றி வழிபடத் தம்பதிகளின் அன்னோனியம் பெருகுமாம்.

News April 1, 2025

அங்கன்வாடி பணிக்கு ரெடியா?

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <>இங்கு கிளிக் <<>>செய்து அறியலாம். இதை பிறர் பயன்பெற SHARE செய்யுங்கள்.

News April 1, 2025

TIDEL Park-ல் வேலை.. உடனே Apply பண்ணுங்க!

image

சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 1, 2025

நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.113-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.118 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.87 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News April 1, 2025

நாமக்கல் மாநகராட்சி முதலிடம்!

image

தமிழ்நாட்டின் 24 மாநகராட்சிகளில் கடந்த 2024-2025-ம் நிதியாண்டில், நாமக்கல் மாநகராட்சி சொத்துவரி வசூலில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டுதான் மாநகராட்சி உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில், இலக்கினை அடைய உதவிய பொதுமக்கள், மேயர் – துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர அலுவலர்கள், பணியாளர்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!