Namakkal

News September 24, 2024

நாமக்கல்லில் 30ம் தேதி நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி அனைத்து துறையின் அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உமா தலைமையில் வரும் 30 ந் தேதி திங்கள் கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 23, 2024

நாமக்கல் முட்டை விலை நிலவரம்

image

புரட்டாசி மாதம் பிறந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் முட்டை விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாகவே ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ5.05 காசுகள் என்ற அளவில் விற்பனையாகிறது. புரட்டாசியில் சற்று நுகர்வு குறையும் இதனால் முட்டை விலையும் கணிசமாக குறையும் என வாய்ப்பிருக்கும் இருப்பினும் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ரூ5.05காசுகள் என்ற விலையிலேயே விற்கப்படுகிறது.

News September 23, 2024

அறிஞர் அண்ணா கல்லூரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

image

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியர் பிரதாப் போக்சோவில் கைதான பிறகும் இன்னும் அவருக்கு கல்லூரி தரப்பில் இருந்து பதவிநீக்கம் செய்யவில்லை. அவரை பணிநீக்கம் செய்யுமாறு இந்திய மாணவர் சங்கம் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு கல்லூரி நிர்வாகம் உறுதி செய்யவும், பேராசிரியரை பதவி நீக்கம் செய்யவும் கோசம் எழுப்பப்பட்டது.

News September 23, 2024

‘என்கவுன்ட்டர்கள் அதிகரித்திருப்பது நல்லதல்ல’

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா இன்று காலை என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் “தமிழ்நாட்டில் சமீப காலமாக என்கவுன்ட்டர்கள் அதிகரித்திருப்பது நல்லதல்ல. காவல்துறையினர் துப்பாக்கியால் சுடுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது” என்றார்.

News September 23, 2024

நாமக்கல்: கண்களை தானமாக வழங்கிய பொறியாளர்

image

நாமக்கல் நகர் மோகனூர் சாலை பகுதி பிவிஆர் தெருவில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற பொறியாளர் சிங்காரவேலு. இவர் வயது மூப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நேற்று மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் எலைட் அரிமா சங்க உதவியுடன், அவரது இரு கண்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிங்காரவேலுவின் சேவையை நாமக்கல் நகர மக்கள் பாராட்டி வருகின்றனர்.

News September 23, 2024

நாமக்கல்: பாலியல் வழக்கில் கல்லுாரி பேராசிரியர் கைது

image

நாமக்கல்லில் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் திருமணமான பிரதாப் (44). இங்கு 22 வயது பெண், முதுகலை பட்டம் பெற்று வீட்டில் உள்ளார். இளங்கலை படித்தபோது பிரதாப்புடன், மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி, பிரதாப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று பிரதாப்பை கைது செய்தார்.

News September 22, 2024

பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

image

நாமக்கல்லில் முதுநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ராமு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக அரசு பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்கள் விட வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ஒரு சில பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டம் நடைபெற்று வரும் காரணத்தால் பள்ளி பள்ளிக்கு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் வருகை புரிகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார் .

News September 22, 2024

பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

image

நாமக்கல்லில் முதுநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ராமு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக அரசு பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்கள் விட வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ஒரு சில பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டம் நடைபெற்று வரும் காரணத்தால் பள்ளி பள்ளிக்கு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் வருகை புரிகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார் .

News September 22, 2024

பாலியல் புகாரில் உதவி பேராசிரியர் கைது

image

நாமக்கல் மாவட்டம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை உதவிபேராசிரியரான பிரதாப் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். இவர் அதே கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவியை தன் பாலியல் இச்சைக்கு விருந்தாக்கி ஏமாற்றியதாக, மாணவி காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் உதவிபேராசிரியர் பிரதாப்பை காவல் துறையினர் கைது செய்தனர்.

News September 22, 2024

உழவர் சந்தையில் காய்கறி ரூ 9.84 லட்சத்திற்கு விற்பனை

image

நாமக்கல் உழவர் சந்தைக்கு கடந்த வாரத்தில் 163 விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த 25135 கிலோ காய், கனி, பூ உள்ளிட்டவர்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ 9,84,450 ஆகும். மேலும் நாமக்கல் உழவர் சந்தைக்கு கடந்த வாரத்தில் 5027 நுகர்வோர் வருகை புரிந்துள்ளனர் அவர்கள் தங்களுக்கு தேவையான காய், கனி, பூ உள்ளிட்டவைகளை வாங்கிச் சென்றனர்.

error: Content is protected !!