India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட நுழைவாயில் பகுதியாக உள்ள வேலூா் காவிரி பாலம் அருகே வாகனச் சோதனைப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் நேற்று ஆய்வு செய்து, காவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா தலைமையில்
பாராளுமன்ற தேர்தல் 24 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமும் மற்றும் பேருந்து பயணிகளிடம் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சேலத்தில் இன்று 19ம் தேதி பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது.இதில் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். கூட்டத்திற்கிடையே பாஜகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகளான லோகேந்திரன், தமிழரசு ஆகியோர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களை நேரில் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நாமக்கல், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராசிபுரம் நகராட்சியில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்தில் கருப்பண்ணன் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு 25 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து அனைத்து ஆடுகளும் இறந்து விட்டன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயம் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சேலம் மாவட்டம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் இன்று 19ஆம் தேதி பாரத பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது அந்த மேடையின் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் ஆர்வத்துடன் செல்பி எடுத்து சமூக வலைகளில் வெளியிட்டுள்ளார்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 18ஆம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் மரு. ச.உமா தலைமையில் பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வங்கியாளர்களுடன் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தேர்தல் அலுவலர் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் விவரங்களை தெரிவிக்குமாறு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சூர்யமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(மார்ச்.18) மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா தலைமையில் பாராளுமன்ற தேர்தல் 24 முன்னிட்டு வங்கி ஊழியர்களிடம் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் பேசும்போது, வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்குரிய வகையில் பணம் பரிமாற்றம் நடந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
Sorry, no posts matched your criteria.