Namakkal

News February 8, 2026

ப.வேலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே அனிச்சம்பாளையம் பிரிவு சாலையில் நேற்று மதியம் டூவீலரில் சென்ற கோகுல் (19) என்ற கூலித்தொழிலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். விபத்தின்போது தலைக்கவசம் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ப.வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 7, 2026

நாமக்கல்: இனி Whatsapp மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.

News February 7, 2026

நாமக்கல்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 7, 2026

நாமக்கல்: இனி அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: <>NSDL <<>>2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.in இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க!

News February 7, 2026

நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்ட பக்தர்கள்

image

நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்த புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று தை மாத சனிக்கிழமையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டது . காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.

News February 7, 2026

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 52 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர்

image

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் அமைக்கும் பணிகள் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது . பணிகள் 6 மாதங்களில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News February 7, 2026

நாமக்கலில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

image

நாமக்கல் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் நடத்தும் 2025-2026 நிதியாண்டுக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள், வரும் பிப்.15- அன்று நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 5-8, 9-12, 13-16 என மூன்று வயது பிரிவினரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு: 0427 2386197, 63829 18902 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News February 7, 2026

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும், அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும் இருக்கும், காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News February 7, 2026

நாமக்கல்லில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)

News February 7, 2026

நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.115 ஆக குறைந்து உள்ளது. அதே போல் ரூ. 72-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை கோழி, நேற்று கிலோவுக்கு ரூ. 2 குறைந்து ரூ. 70- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!