Namakkal

News January 6, 2025

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில்
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார்
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில்
நாளை 6 ந் தேதி
காலை 9 மணியளவில்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில்
பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

News January 5, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 25 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மழை, பனி. குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று ஒரு முட்டையின் விலை ரூ 5.05 ஆக இருந்தது.

News January 5, 2025

ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தலைமையில், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் 07.01.2025 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்து மரவள்ளி கிழங்கு பயிர் செய்யக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு முத்தரப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

News January 5, 2025

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (05/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9894170004), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News January 5, 2025

பாஜக மாவட்ட தலைவர் தேர்தல் கருத்து கேட்பு கூட்டம்

image

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மாவட்ட தலைவர் தேர்தல் கருத்து கேட்பு கூட்டம் இன்றைய தினம் நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு ராதா பிரசாத் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 5, 2025

நாமக்கல்: 50 பேர் திமுகவில் இணைவு

image

வெண்ணந்தூர் ஒன்றியம், மூலக்காடு ஊராட்சி அதிமுக இளம்பெண் பாசறை செயலாளர் ஆர்.சுகந்தி மற்றும் தேமுதிக கிளை செயலாளர் வி.சின்னதுரை ஆகியோர் தலைமையில் அதிமுக மற்றும் தேமுதிக கட்சியிலிருந்து 50 பேர் விலகி KRN ராஜேஷ்குமார் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

News January 5, 2025

நடிகை கௌதமிக்கு உற்சாக வரவேற்பு

image

நடிகை கௌதமி அதிமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலந்துகொண்டு கட்சியின் கொள்கை பற்றி எடுத்துரைத்து கூறி வருகிறார். அதனை தொடர்ந்து இன்று காலை நாமகிரிப்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்ள வருகை தந்த போது ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் பேரூர் செயலாளர் மணிக்கண்ணன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

News January 5, 2025

நாமக்கல்: முக்கிய அரசியல் தலைவர் அழைப்பு

image

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து திமுக அரசுக்கு எதிராக போராட வேண்டும் என பாஜக சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், பாஜக மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தை பாஜக கையில் எடுத்து தீவிரமாக களமாடி வருவது கவனிக்கத்தக்கது.

News January 5, 2025

முன்னாள் அமைச்சருக்கு அரசு விழா அழைப்பிதழ் வழங்கல்

image

நாமக்கல், கபிலர்மலை அரையநாடு அல்லாள இளைய நாயகர் அறக்கட்டளை சார்பில் நேற்றைய தினம் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கமணி மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆகியோருக்கு பட்டக்காரர் சார்பாக விழா குழுவினர் தை 1இல் நடைபெறும் மாமன்னர் அல்லாள இளைய நாயகரின் அரசு விழா அழைப்பிதழ் அவர்களது இல்லத்தில் வழங்கப்பட்டது.

News January 5, 2025

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 530 காசுகளாக நீடித்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக குறைந்துள்ளது. முட்டை உற்பத்தி அதிகரிப்பு மற்றும் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் விலை சரிவடைந்துள்ளது.

error: Content is protected !!