India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க! யாருக்காவது நிச்சயம் இது உதவும்!

நாமக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு<

நாமக்கல் மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள்<

நாமக்கல் மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ.4.30 ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. பிற மண்டலங்களில் விலை மாற்றம் இல்லாததால் இங்கும் தற்போது விலையை மாற்ற தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது. மேலும் கறிக்கோழி விலை கிலோ ரூ.133, முட்டைக் கோழி விலை ரூ.62 என நிர்ணயிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூரை சேர்ந்த மைலேஷ் தலைமையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி முன்னிலையில், 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது, பேரூர் செயலாளர்கள் முருகன், ரமேஷ்பாபு, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அருகே மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னபொண்ணு (75) என்ற மூதாட்டி, சாலையைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய நபர் குறித்து மங்களபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 மையங்களில் தெருநாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும். உள்ளாட்சிப் பணியாளர்கள் மூலம் பிடிக்கப்படும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஐந்து நாள் கண்காணிப்பிற்குப் பின் மீண்டும் அதே இடங்களில் விடப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேர ரோந்து பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாகக் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளுக்கான ஆய்வாளர்கள் மற்றும் வாகன ரோந்து அதிகாரிகளின் பெயர்கள், அவர்களின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.