Nagapattinam

News October 11, 2024

வேதாரண்யம் அருகே மர்மமான முறையில் பெண் பலி

image

வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி பகுதியை சேர்ந்தவர் கலைமகள் (43). தனது வீட்டிற்கு அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றார், நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடியபோது குளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவருடைய உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News October 10, 2024

திருப்பூண்டியில் ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர்

image

திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகள் சார்பில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் காரைநகர் புதுப்பாலம் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., இன்று(10.10.2024) ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உடன் இருந்தார்.

News October 10, 2024

நாகை: வெளிநாடுகளுக்குச் செல்வோர் கவனத்திற்கு!

image

நாகை மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புவோர் வேலை வாய்ப்பு பயிற்சி துறை மூலமாக வேலை அளிப்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் ஆகியோரை இணைக்கும் வகையில் தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டுள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து நம்பத்தகுந்த இடங்களில் பணிபுரியலாம் என ஆட்சியர் ஆகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

செருதூர் மீனவர்களிடம் கடல் கொள்ளையர்கள் கைவரிசை

image

நாகை, செருதூரை சேர்ந்த சத்தியசீலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் விஜயன், ரமணன், விக்னேஷ்குமார், ரீகன் ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 பைபர் படகில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி 250 கிலோ மீன்பிடி வலை, செல்போன், ஜிபிஎஸ், 100 லிட்டர் டீசல் மற்றும் ரேஷன் பொருட்களை பறித்துச் சென்றுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

News October 10, 2024

நாகையில் ரேஷன் கடையில் காலி பணியிடங்கள்

image

நாகையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 19 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbngt.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.

News October 9, 2024

நாகையில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

image

நாகையில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் 10 ஆயிரம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். எனவே வேலை வாய்ப்பற்றோர் முகாமில் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 8, 2024

நாகையில் கம்யூனிஸ்ட் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதில் இந்தியா கைகோர்ப்பதையும் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டு இயக்கம் சார்பில் இன்று நாகப்பட்டினம் அவுரி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, சிபிஎம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, சிபிஎம் மாவட்ட செயலாளர் சிவகுருநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News October 8, 2024

நாகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர்

image

நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் அக்டோபர் 19ந் தேதி நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த வேலை வாய்ப்பற்றோர் பங்கேற்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW!

News October 8, 2024

மத நல்லிணக்கத்தின் அடையாளம் நாகூர் தர்கா

image

நாகூரில் அமைந்துள்ள நாகூர் ஆண்டவர் தர்கா என்பது சூஃபி துறவி சையது அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது கல்லறையின் மீது கட்டப்பட்ட தர்கா ஆகும். ஷாகுல் ஹமீத் நாகூரில் பல அற்புதங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது. இதனால் 16-ஆம் நூற்றாண்டில் இந்து மக்கள் மற்றும் மன்னர்களின் பெரும் பங்களிப்புடன் நாகூரில் தர்கா கட்டப்பட்டது. இது அப்பகுதியில் இரு மதங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வின் அடையாளமாக விளங்குகிறது. SHARE NOW

News October 8, 2024

நாகை மாவட்டத்திற்கு புதிய பொறுப்பு அமைச்சர்

image

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமையச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!