Nagapattinam

News March 18, 2026

நாகை: பைக் மோதி போலீசார் படுகாயம்

image

நாகை மாவட்டம் கள்ளிமேடு பள்ளிவாசல் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த தாமரைப்புலத்தை சேர்ந்த சதீஸ்(36) என்பவர், சோதையில் ஈடுப்பட்ட காவலர் சதீஸ்குமார் மீது மோதியுள்ளார். இதில், காவலர் படுகாயமடைந்து, தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

News March 18, 2026

நாகை: தனிப்படை போலீசார் அதிரடி – ஒருவர் கைது

image

நாகை மாவட்டம் வாஞ்சூர் சோதனை சாவடியில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்னர். அப்போது காரைக்காலில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதை மேற்கொண்டதில், காரில் 5 மூட்டைகளில் 750 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மது பாட்டில் கடத்திய பாப்பாக்கோவில் சமத்துவபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News March 18, 2026

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 17) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 18, 2026

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 17) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 17, 2026

நாகை: மெடிக்கல் செல்வோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 17, 2026

நாகை மக்களே.. 250 கோழிகள் இலவசம்!

image

நாகை மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News March 17, 2026

நாகை: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

நாகை மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 17, 2026

நாகை: BE / B.tech முடித்தால் வங்கி வேலை!

image

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E. / B.tech.
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: CLICK HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 17, 2026

நாகை அருகே ரூ.74,100 பறிமுதல்; பறக்கும் படை அதிரடி

image

கீழ்வேளூா் தொகுதிக்குட்பட்ட கீழையூரில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, கோபாலசமுத்திரத்தைச் சோ்ந்த முகம்மது ராவுத்தரிடம் ஆவணங்களின்றி இருந்த ரூ.74,100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த பணம் கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News March 17, 2026

நாகை: சாராயம் கடத்திய இருவர் அதிரடி கைது

image

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் போலீசாருக்கு காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுபானங்கள் கடத்தி வருவதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 750 சாராய பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாராயம் கடத்திய இருவரை நாகூர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!