India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாயிண்ட் காலிமர் முனை என்றழைக்கப்படும் கோடியக்கரை கடற்கரை நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. தேவராப்பாடலிலும் இக்கடற்கரை இடம்பெற்றுள்ள இங்கு 2004இல் அழிந்த சோழர்கால கலங்கரை விளக்கத்தின் எச்சம் காணப்படுகிறது. 12 கி.மீ நீளமுள்ள இக்கடற்கரையில் 250க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான ஃபிளமிங்கோ பறவைகள் இங்கு இடம்பெயர்ந்து வரும்.
நாகை அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் தமிழக அரசு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி 11 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்திற்கு இன்று முதல் இடம் மாற்றம் செய்துள்ளது மக்களை பெரிதும் பாதிக்கும் அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சி நாகை மண்டல ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கீழ்வேளுர் அருகே உள்ள தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் குழந்தைகளை செடல் மரத்தில் அமர்த்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.
நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சிக்கு உட்பட்ட காருகுடி சின்ன வடக்குவெளி பகுதியில், சிறு பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வாய்க்காலின் கோரிக்கை சிறுபாலம் கட்டும் பணி இன்று தொடங்கியது. இந்த பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடியும் என ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார்.
நாகை அடுத்த வாய்மேடு உடைய அய்யனார் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 20ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜை நிறைவு பெற்று மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பட்டு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருக்குவளை அடுத்த வலிவலத்தில் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சோமஸ்கந்தர் அம்பாளுடன் தேரில் எழுந்தருள சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில், நாகை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான பகுதிகள் நீரின்றி வறண்ட பாலைவனம் போல் காட்சி அளித்து வருகிறது. இதனால் கால்நடைகளுக்கு தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கால்நடை வளர்ப்போருக்கு கோடைகால நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
முருகனின் ஆதிபடை வீடான நாகை மாவட்டம் எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாகை மட்டுமின்றி திருவாரூர் மயிலாடுதுறை காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருமருகல், இடையாத்தாங்குடி ஊராட்சி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் முருகராஜ் (38). இவா், 150-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த விளைநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன. திருமருகல் தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.
கீழ்வேளூர் வட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாப ராமபுரத்தில் நேற்று பரமேஸ்வரி என்பவரின் கூரை வீடு எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து கீழையூர் ஒன்றிய திமுக செயலாளரும் வேளாங்கண்ணி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் சேதமடைந்த வீட்டினை இன்று மாலை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.