Nagapattinam

News May 1, 2024

ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சி

image

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபக்கோயிலான
திருக்குவளை அங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்திரை பெருவிழா ஏப்.25 ஆம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. அதன்படி
5ஆம் நாளான நேற்றிரவு ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

News April 30, 2024

ஒ.எஸ்.மணியன் பகீர் குற்றச்சாட்டு

image

கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளால் வேதாரண்யம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் பாபநாசம் வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைபூண்டி வழியாக தலைஞாயிறு வேதாரண்யம் பகுதிக்கு வருகிறது. இந்த வழித்தடங்களில் குடிநீர் முறைகேடாக பல ஊர்களில் எடுக்கப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க ஒ.எஸ்.மணியன் கேட்டு கொண்டுள்ளார்.

News April 30, 2024

நாகை: மீனவர்கள் மீது தாக்குதல்

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை பகுதியில் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் நான்கு மீனவர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது கடலில் வந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் முருகனை கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த மீனவர்கள் கரை திரும்பியவுடன் அரசு மருத்துவ கல்லூரியில்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News April 29, 2024

வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

image

நாகை மக்களவைத் தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் செல்லூர் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆயுதம் ஏந்திய மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார், தமிழ்நாடு மாநில போலீசார் என அடுத்தடுத்து 3 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

கல்லூரி சுற்றுப்புறத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

image

நாகை மக்களவைத் தொகுதிக்குஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் செல்லூர் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த கல்லூரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள், வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

நாகையின் சிக்கல் சிங்காரவேலன் கோவில் சிறப்பு!

image

சிக்கல் சிங்காரவேலன் கோவில் என்றழைக்கப்படும் நவநீதீஸ்வரர் கோவில் சிக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ளது. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் சிவனும் விஷ்னுவும் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் தொன்மையான கோவில்களில் இதுவும் ஒன்று. 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில் தமிழ் கட்டடக்கலையில் வடிவமைக்கப்படுள்ளது. மூலவர், 12 கைகளைக் கொண்டு ஆறுமுக வடிவில் காட்சிதருகிறார். இங்கு சரவணப் பொய்கை குளமும் உள்ளது.

News April 29, 2024

நாகை உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

image

நாகை பகுதியில் பிஸ்கெட் வேபர் பிஸ்கெட் , ஐஸ் கிரீம் போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அந்த உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜன் கலந்து விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 29, 2024

நாகை நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

நாகை மாவட்ட நீதித்துறையில் 120 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த <>LINK<<>> க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 28, 2024

நாகையில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

image

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம்
மே 1ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் நாகை மாவட்டத்தை சேர்ந்த 19 வயதுக்கு உட்பட்டவர்கள், ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று, பயிற்சி முகாமில் பங்கேற்கலாம் என நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜூலியஸ் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

மே இறுதியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களை மே மாதம் 4 வது வாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தங்களது வாகனங்களை தயார் செய்து ஆய்வு நாளன்று ஆய்வுக்கு உட்படுத்தி உரிய சான்று பெற்று இயக்க வேண்டும் என நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.