India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது 3 பேரிடமிருந்து ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.9.60 லட்சம் பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரில் வந்தவர்களிடம் இருந்து தனித்தனியாக பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்க உள்ளது. இதனால் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே நாகை மாவட்ட பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். அல்லது <

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அவ்வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் MLA-வுமான O.S.மணியன் போடியிட உள்ளார். தொடர்ந்து 3வது முறையாக வேதாரண்யம் தொகுதியில் O.S.மணியன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த நாதக முன்னாள் மாநில நிர்வாகியான காளியம்மாள் கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார்.
அதனைத் தொடர்ந்து உள்ளூர் சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இணைந்ததையடுத்து அவருக்கு கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் EPS அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட வேதாரண்யம், கீழ்வேளூர், நாகை உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் நேற்று அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியான நிலையில், கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில், வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில், EPS மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென அவர் வாக்கு சேகரித்தார்.

நாகை மாவட்டம் குருமணாங்குடியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (எ) ரஜினி. இவர் மீது கடந்த 2025-ல் போக்சோ வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் தனக்கு எதிராகச் சாட்சி சொல்லக்கூடாது எனப் புகார்தாரரான பெண் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த வழக்கை விசாரித்த கீழ்வேளூர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி, குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தார்.

நாகை மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரம் வெளியிட முன் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 3 நாட்களுக்கு முன், பிறர் 7 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்கு தெளிவான லேபிள் அவசியம். தவறான தகவல்கள் 3 மணி நேரத்தில் நீக்கம் செய்யப்படும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.