India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியிலிருந்து காரைக்கால் வரை இயக்கப்பட்ட ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருவாருர் வரை மட்டுமே இயங்கி வந்தது. இதனை மீண்டும் நாகை வழியாக காரைக்கால் வரை இயக்க பயணிகள் விடுத்த கோரிக்கை இன்று காலை வே டூ நியூசில் வெளியிடப்பட்ட நிலையில் நாளை 1 ந்தேதி முதல் வழக்கம் போல் திருச்சி – காரைக்கால் ரெயில் நாகை நாகூர் வழியாக காரைக்கால் வரை இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது
நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் இன்று காலை இளம் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டது. மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் செந்தில்நாதன் குத்துவிளக்கு ஏற்றி இளம் பச்சிளம் குழந்தை பிரிவை தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் இருந்து நாகூர் வழியாக காரைக்கால் வரை இயக்கப்பட்ட ரெயில்கள் ஆகஸ்ட் 1ந்தேதியில் இருந்து திங்கள்கிழமை தவிர மற்ற நாட்களில் திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நாகூர் கந்தூரி விழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடரும் விழாக்களை ஓட்டி பயணிகள் நலன் கருதி திருச்சி – காரைக்கால் ரெயிலை டிசம்பர் முதல் மீண்டும் நாகை நாகூர் வழியாக இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சென்னை, திருச்சி கரூர், புதுக்கோட்டை மதுரை, சிதம்பரம். இராமநாதபுரம், தஞ்சாவூர். கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும், நாகை நாகூர் மற்றும் காரைக்கால் நாகூர் வழித்தடத்திலும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் நகரம் 24 வது வார்டு அ.தி.மு.க செயலாளர் முனியையன் மகன் சுப்ரமணியன் என்பவர் நாகூர் பகுதியில் சாலையில் செல்லும் போது மாடுகள் குறுக்கே வந்து மோதியதில் சம்பவயிடத்திலேயே இன்று உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்த அ.தி.மு.க பொதுசெயலாளர் பொதுச்செயலாளர் பழனிச்சாமி சுப்ரமணியன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
கீழ்வேளூர்-தேவூர் சாலை கனமழையினால் சேதமடைந்து விபத்து ஏற்படும் நிலை நிலவுகிறது என இன்று (நவ.29) காலை Way2News-இல் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக, நாகை நெடுஞ்சாலைதுறை கோட்டப் பொறியாளர் உத்தரவின் பேரில், உதவி பொறியாளர்கள் மேற்பார்வையில் இன்று மாலை சாலை ஜே.சி.பி எந்திரம் கொண்டு சாலை சீரமைக்கப்பட்டது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை (நவ.30) பிற்பகல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட மாவட்டங்களில் 70-90 கீ.மி வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், நாளை நாகை மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழைவ வரை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நாகையில் இருந்து சுமார் 300 கீ.மி தொலைவில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது காரைக்கால்-புதுச்சேரி இடையே கரையை கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயலின் காரணமாக நாகை துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகை துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழையால் பாதிக்கப்பட்டு பயிர் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் நெற்பயிர்களுக்கு, 4 கிலோ டி.ஏ.பி உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில், முதல் நாள் கரைத்து வைத்து மறுநாள் வடிகட்டி, 2 கிலோ யூரியா, 1 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை 190 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் மகசூல் இழப்பை தவிர்க்கலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண் அலுவலர்களை அணுகி பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தியவர்கள் தமிழக அரசின் தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்றும், தங்களது விண்ணப்பத்தினை நாகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்திட நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.