India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி ஊன்றுகோல் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் போன்றவை விலையில்லாமல் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் 19ஆம் தேதி காலை வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடக்கிறது. எனவே மாற்றுத் திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நாகை கிளை டெப்போவிற்கு தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் வைத்துள்ள தகுதியான நபர்கள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 94423 46036 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மற்றும் சமூக நலன் மகளிர் உரிமை துறை ஆகியவற்றின் சார்பில் பத்து பயனாளிகளுக்கு ரூபாய் 2 லட்சத்து 59 ஆயிரத்து 92 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி, காமேஸ்வரம், பிரதாபராமபுரம், புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி கடற்கரைகளில் திமிங்கலம், கடல் ஆமைகள் அடிக்கடி கரை ஒதுங்குவது வழக்கம். இந்நிலையில், விழுந்தமாவடி அருகே மணல்மேடு கடற்கரையோரத்தில் சுமார் 5 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட டால்பின் இறந்த நிலையில் நேற்று முன்தினம் கரை ஒதுங்கியது.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது ஸ்மார்ட் கார்டில் கைரேகை வைப்பது அவசியம். அதுபோல் ஸ்மார்ட் கார்டில் ஆதார் எண் இணைப்பதும் அவசியமாகும். இவை இரண்டும் இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாது. இதனால் ஆதார் விடுபட்டு போனவர்கள் மற்றும் நீண்ட நாட்கள் ஸ்மார்ட் கார்டில் கைரேகை வைக்காமல் உள்ளவர்களிடம் கைரேகை வைக்கும் பணி நீலப்பாடி ரேஷன் கடையில் வட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சை பயறு போன்ற பயறு வகைகளை சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள் வெள்ளை ஈ, அஸ்வினி பூச்சி போன்ற பூச்சி தாக்குதலை தவிர்க்க வரப்பு பயிராக ஆமணக்கு, மக்காச்சோளம் மற்றும் ஊடுபயிராக சூரிய காந்தி பயிரிட வேண்டும். மீத்தைல் டெமெட்டான் மருந்தினை ஏக்கர் ஒன்றுக்கு 200 மில்லியும், டைமீத்தோயேட் மருந்தினை 200 மில்லியும் தெளிக்க வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோயில் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 79ஆவது ஆலயம். இத்தல மூலவர் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார். தனி சன்னதியில் அருள்பாலிக்கும் உத்திராபதீஸ்வரர் தற்போதும் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 142ஆவது தேவாரத்தலம் ஆகும்.
கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருச்சேறை கிராமத்தில் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ருணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டால் தீராத கடன் பிரச்சனையும், முற்பிறவியில் செய்த பாவங்களும் தீரும் என்பது ஐதீகம். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரிய ஒளி இங்குள்ள சுவாமி அம்பாள் மீது நேரடியாக விழுவது தனி சிறப்பு.
விழுந்தமாவடி -மணல்மேடு கடற்கரையில் சுமார் 5 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இந்த டால்பினை அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஆழ்கடலில் நீந்தும் போது ஏதேனும் கப்பல் அல்லது பாறைகளில் மோதியோ மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீந்த முடியாமல் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
Sorry, no posts matched your criteria.