Nagapattinam

News October 8, 2024

மத நல்லிணக்கத்தின் அடையாளம் நாகூர் தர்கா

image

நாகூரில் அமைந்துள்ள நாகூர் ஆண்டவர் தர்கா என்பது சூஃபி துறவி சையது அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது கல்லறையின் மீது கட்டப்பட்ட தர்கா ஆகும். ஷாகுல் ஹமீத் நாகூரில் பல அற்புதங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது. இதனால் 16-ஆம் நூற்றாண்டில் இந்து மக்கள் மற்றும் மன்னர்களின் பெரும் பங்களிப்புடன் நாகூரில் தர்கா கட்டப்பட்டது. இது அப்பகுதியில் இரு மதங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வின் அடையாளமாக விளங்குகிறது. SHARE NOW

News October 8, 2024

நாகை மாவட்டத்திற்கு புதிய பொறுப்பு அமைச்சர்

image

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமையச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 8, 2024

பருவமழை – தொலைப்பேசி எண்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக நிலையில் நாகையில் அவ்வப்பொது மழை பெய்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அவர்கள் பருவ மழையின் போது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் அசம்பாவிதங்கள் பற்றி எந்நேரமும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க 04365-1077 மற்றும் 1800-233-4-233 ஆகிய தொலைபேசி இலவச எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

News October 8, 2024

வெடிப்பொருள் விற்பவர்கள் கவனத்திற்கு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக வெடிக்கடை அமைக்க விரும்புவோர் வெடிப்பொருள் சட்டம் 1884 மற்றும் வெடிப்பொருள்கள் விதி 2008ன் கீழ் வருகின்ற 19 ந்தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ சேவை மையங்களில் விண்ணப்பிக்குமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 7, 2024

மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பங்கேற்றனர். குறிப்பாக மனு அளிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

News October 7, 2024

நாகப்பட்டினம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 9944229934, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News October 6, 2024

நாகையில் மதிப்பீட்டு குழு ஆய்வு நாள் ஒத்திவைப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவினர் கால்நடை, வேளாண்மை, நெடுஞ்சாலை, நகராட்சி குடிநீர் வழங்கல் உள்ளிட்ட 10 துறைகளில் வருகின்ற 8ந்தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட இருந்தனர் இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்கான ஆய்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

News October 6, 2024

நாகை அருகே குட்கா விற்ற கடைக்கு 25,000 அபராதம்

image

நாகப்பட்டினம், காடம்பாடி, பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியில் இயங்கிவரும் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன், நேற்று ஆய்வு மேற்கொண்டதில் புகையிலை பொருட்கள் கடையில் இருந்ததால் கடைக்கு சீல் வைத்து ரூபாய் 25,000 அபராதம் விதித்தனர்.

News October 6, 2024

நாகையில் உச்சம் தொட்ட தக்காளி விலை

image

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தக்காளியின் விலை உயர்வது வழக்கம். இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து மழை காரணமாக குறைந்துள்ளதுள்ளதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் நாகையில் ரூ.40-க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.80-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News October 5, 2024

தொழில் முனைவோர்களுக்கு சான்றிதழ் பயிற்சி

image

தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு பயிற்சி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தனது செய்திகுறிப்பில் தெரிவித்தார். நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர் ஒரு ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பயனடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.