India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 15ஆம் தேதி நடக்கிறது. நாகை ADM மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்யப்பட உள்ளன என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று (மார்ச்.11) நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW..
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் குடும்ப அட்டை, கல்வி உதவி தொகை வேலை வாய்ப்பு வேண்டல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 283 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி நாகூர் – நன்னிலம் மெயின் சாலையில் நடந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் சன்னாநல்லூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த என்பதும் சன்னாநல்லூரில் இருந்து நாகைக்கு மோட்டார் சைக்கிளில் வந்ததும் முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இது குறித்து நாகூர் போலீசார் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் <
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமக தேர்த்திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதனால் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்தும், இந்த உள்ளூர் விடுமுறை வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக ஈடு செய்யப்படும் எனவும், இன்று பொதுத்தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW.
கும்பகோணம்,திருபுவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் கோயிலில் மனிதன்,பறவை மிருகம் போன்ற கலவையாக அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல் பில்லி சூனியத்தால் துன்பப்படுவோர், தீராத நோயுற்றவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு அவர்களின் தலையெழுத்தே மாறும் என்பது ஐதீகம்.Share It
நாகை மாவட்டத்தில் நடந்த உலக மகளிர் தினவிழாவின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன்கள், மக்கள் அமைப்புகளுக்கு மாவட்ட அளவிலான மணிமேகலை விருது மற்றும் ரூ.6 லட்சம் பரிசுத்தொகை என மொத்தம் 494 பயனாளிகளுக்கு ரூ.30.8 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாகூரை அடுத்த வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது அவ்வழியே நாகை வெளிப்பாளையத்தைச் சேர்ந்த கோமதி (37) மற்றும் வெளிப்பாளையம் ராமநாயக்கன்குள பகுதியைச் சேர்ந்த இந்திரா (67) ஆகிய இருவரும் 110 லிட்டர் புதுவை சாராயம் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து நாகூர் காவல்நிலைய போலீசார் இது குறித்து வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் அதே பகுதியை சேர்ந்த எலன்மேரி இருவரும் வேளாங்கண்ணியில் தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கிள் உள்ளனர். இந்த நிலையில் ஜனார்த்தனின் நண்பர்கள் சாகர் மற்றும் ஜீவா இருவரும் வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று நண்பர்களுடன் ஜனார்த்தன் சென்ற நிலையில் அவரை ரயில்வே ஸ்டேஷன் அருகே கல்லால் அடித்தும் உடைந்த பாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளனர். இருவரும் தஞ்சாவூரில் கைது ஆகியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.