India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினாரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினாராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, ஜொலித்து காணப்படுவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.
உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
திருக்கண்ணபுரம் ஊராட்சி, கோட்டூரில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வருவாய் துறை சார்பில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று வழங்கினர். பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் தவித்த எங்களுக்கு பட்டா வழங்கிய தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் சிலர் படகில் இருந்த 200 கிலோ வலை, ஜிபிஎஸ் உள்ளிட்டவற்றை அபகரித்து விட்டு மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். கரை திரும்பிய மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஹர்ஷ் சிங் பணி மாறுதலில் சென்ற நிலையில், நாகை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் இன்று பொறுப்பேற்று கொண்டார். மேலும் இவருக்கு காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு, மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் sdat.in/cmtrophy/player-login/ என்ற இணையதளத்தில் இம்மாதம் 25 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் பதிவு செய்யலாம்.
நமது நாட்டின் 78வது சுதந்திர தினம் இதில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாகூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவின் மினராக்கள் மற்றும் முகப்பு பகுதிகளின் பல்வேறு இடங்களில் தேசிய கொடியை குறிக்கும் வகையில் மூவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. இதனை அங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ். தலைமையில் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 237 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்தினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், இன்று வழங்கினார்.
இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆறுகாட்டுத்துறை மீனவர்களை நாகை மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சிகழக தலைவர் என்.கௌதமன் நேரில் சந்தித்து மருத்துவரிடம் அவர்களின் உடல்நிலை பற்றி விசாரித்து மீனவர்களுக்கு நிதி உதவி அளித்தார். இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் நகர மன்ற தலைவர் புகழேந்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.