Nagapattinam

News October 1, 2024

நாகப்பட்டினம் வரும் ரெயில்கள் ரத்து

image

கீழ்வேளூர், நாகை, நாகூர், காரைக்கால் வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால் – திருச்சி, காரைக்கால் – தஞ்சை வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் இன்று முதல் 31ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதன்படி திருச்சி – காரைக்கால் ரெயில் திருவாரூர் வரையும் காரைக்காலில் இருந்து இயக்கப்பட்ட ரெயில்கள் திருவாரூரில் இருந்தும் இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

News October 1, 2024

272 மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பேபி தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 272 மனுக்களைப் பெற்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார் என நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

News September 30, 2024

நாகையில் மதுக்கடைகளை மூட உத்தரவு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் காந்தியடிகள் பிறந்த நாள் விழாவான காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 2.10.24 ஒருநாள் தமிழ்நாடு வாணிபக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் எப்.எல் -1, எப்.எல்-2, எப்.எல்-3. எப்.எல்-3ஏ. எப்.எல்.3-ஏஏ மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

News September 29, 2024

4ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்கூட்டம்

image

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் வருகின்ற 4ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரக முதன்மை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கிறது.
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 28, 2024

வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த ஆட்சியர்

image

வேதாரண்யம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது திடீரென வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் பதிவேடுகள் பராமரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு அரசு அலுவலர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று ஊழியர்களிடம் குறைகள் கேட்டறிந்து பொதுமக்களிடம் கனிவாக நடந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.

News September 28, 2024

நாகையில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட பேக்கரிக்கு சீல்

image

நாகை அரசு மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் பேக்கிரியில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் தயாரித்ததாக, நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் நேற்று திடீா் ஆய்வு செய்தனா். பேக்கரி சுகாதாரமற்ற முறையிலும், உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லாமலும் கடை செயல்பட்டது தெரியவந்தது. அதனையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

News September 27, 2024

நாகையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகள் மீள பள்ளியில் சேர்த்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் இன்று (27.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

News September 27, 2024

கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

image

திருக்கண்ணபுரம் அங்காளம்மன் கோவிலை சேர்ந்தவர் நடராஜன் (57). கூலித் தொழிலாளியான இவர்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து மேலே ஊற்றி கொண்டு தீ பற்ற வைத்துக் கொண்டார். நடராஜனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News September 27, 2024

பெரம்பலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

image

தஞ்சை மண்டலம் சார்பில், நாகை சவகர் சிறுவர் மன்றம் சார்பாக, மாவட்ட அளவிலான மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் குறித்த கலைப் போட்டிகள் 06.10.2024 அன்று தமயந்தி நடராஜர் மேல்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9442507705 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 27, 2024

நாகை: விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் நேற்று வழங்கினர்.

error: Content is protected !!