Mayiladuthurai

News September 3, 2024

மருத்துவ செலவிற்கு காசோலை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தன் விருப்ப நிதியிலிருந்து சீர்காழி வட்டம் பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜலெட்சுமியின் மருத்துவ செலவினத்திற்கு ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையை இன்று வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News September 2, 2024

சீர்காழி மாணவி சாதனை

image

சீர்காழியை சேர்ந்தவர் யோகா மாணவி சுபானு மணிவண்ணன். இவர் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா உமன் லீக் 2024 போட்டியில் பங்கேற்று தனி பிரிவில் வெள்ளிப் பதக்கமும் குழுவினர் பிரிவில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். பதக்கங்கள் வென்று சீர்காழிக்கு பெருமை சேர்த்த மாணவியை சீர்காழி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

News September 2, 2024

மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், விநாயகா் சிலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிா்வாகம் அனுமதிக்கும் இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா். களிமண்ணால் செய்யப்பட்டதும், சுற்றுச்சூழலை பாதிக்காத பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட சிலைகளை கரைக்க வேண்டும். சிலைகளை குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

News September 1, 2024

மயிலாடுதுறை வழியாக திருவாரூர் வரை செல்லும் ரயில் தாமதம்

image

விழுப்புரத்திலிருந்து மயிலாடுத்துறை வழியாக திருவாரூர் வரை செல்லும் திருவாரூர் பாசஞ்சர் ரயில் நாளை தாமதமாக இயங்கும். நாளை (செப் 2) மாலை 6:55 மணிக்கு புறப்படுகிறது வழக்கமாக விழுப்புரத்திலிருந்து 6:25 மணிக்கு புறப்படும் ரயிலானது 30 நிமிடங்கள் தாமதமாக 6:55 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலானது மயிலாடுத்துறைக்கு இரவு 9:30 மணிக்கு வந்தடைகிறது.

News September 1, 2024

மயிலாடுதுறையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், இணைந்து நடத்தும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A தேர்வை எதிர்கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லா மாதிரித் தேர்வு நாளை (செப்.02) பட்டமங்கல தெருவில் உள்ள தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வானது காலை 9:30 மணி முதல் மதியம் 1 வரை நடைப்பெறும்.

News September 1, 2024

மயிலாடுதுறையில் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் செப்.2 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் இந்த முகாமில் தவறாமல் பங்கேற்று பயனடையுமாறு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

News September 1, 2024

பொறையார் அருகே தமிழக வெற்றி கழகம் விழா

image

தரங்கம்பாடி வட்டம் காழியப்பநல்லூர் ஊராட்சியில் அனந்த மங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு வெற்றி கழக கட்சி கொடியை மாவட்ட செயலாளர் குட்டி கோபி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முதலில் தமிழக வெற்றி கழகம் கட்சி கொடி ஏற்றப்பட்டுள்ளது.

News September 1, 2024

காலை முதல் மீன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இன்று காலை முதல் பொதுமக்கள் மீன்கள் வாங்க ஆர்வம் காட்டினர். உள்ளூர் மட்டுமின்றி வெளி பகுதிகளில் இருந்து மீன்கள் வாங்கி சென்றனர்.

News August 31, 2024

போலீஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டாஸில் கைது செய்யப்பட்டார். கடந்த 1ஆம் தேதி திருவெண்காடு சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் கலைவேந்தன் என்பவர் பெட்ரோல் குண்டு விசினார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

News August 31, 2024

மயிலாடுதுறையில் சுயதொழில் தொடங்க அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் சுயதொழில் தொடங்க ஆட்சியர் மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார். கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்களது விவரங்களை சேவை மையம் அல்லது கைபேசியின் வாயிலாக பதிவு செய்யலாம். மேலும், 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!