India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக பணிபுரிபவர் மணிக்குமார்(58). இவர் பணிச்சுமை காரணமாக நேற்று இரவு அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை பணிக்கு வந்த அலுவலர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில் தற்காலிகமாக வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் – திருச்சி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், செப்டம்பர்-19, 20 மற்றும் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாமல் விருதுநகர் மற்றும் திருச்சி வழியாக மயிலாடுதுறை வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த ஆண்டு சிறுமிக்கும் குத்தாலத்தை சேர்ந்த ஜெயகாந்தன்(20) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் ஜெயகாந்தன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தி அவரை தேடிவருகின்றனர்.
தந்தை பெரியாரின் 146-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், தொடர்ந்து இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை கூறைநாட்டில் தனியார் கடையில் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த 19 வயதான இளைஞன் தான் குடியிருக்கும் மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய மயிலாடுதுறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணையில் நடைபெறுகிறது.
குத்தாலம் வட்டாரத்தில் நாளை (செப்.18) காலை 9 மணி முதல் செப்டம்பர் 19-ஆம் தேதி காலை 9 மணி வரை முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி, கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 51 ஊராட்சிகளிலும் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று உரிய தீர்வு காண்பார்கள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சலவைத் தொழில் மேற்கொள்ளும் ஏழை எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இன மக்களுக்கு, திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் உரிய விண்ணப்பங்களை பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று கொடியசைத்து கொடியசைத்து துவக்கி வைத்தார். தருமபுரம் ஞானாம்பிகை கல்லூரியில் வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில், 04364299790 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை கேட்டறியலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மயிலாடுத்துறையில் கடந்த நான்கு நாட்களாக பராமரிப்பு பணி காரணமாக மதியம் 12 மணிக்கு மயிலாடுத்துறையில் இருந்து செல்லக்கூடிய செங்கோட்டை ரயிலானது குத்தாலத்தில் இருந்து புறப்பட்டது. இதனிடையே செப்டம்பர் 16 இன்று முதல் செங்கோட்டை செல்லும் ரயில் மயிலாடுத்துறையில் இருந்து புறப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.